முதலீடு இல்லா தொழில்துறைகளில் வெற்றி கொடி நாட்டுவது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

தொழில் தொடங்குவது என்பது யார் வேண்டுமனாலும் செய்யலாம். ஆனால் அது எந்தமாதிரியான தொழில் துவங்குவது, எப்படி கொண்டு செல்வது மற்றும் எவ்வளவு முதலீடு செய்வது என்பதில் தான் நாம் செய்யும் தொழிலின் வெற்றி ரகசியம் அடங்கியுள்ளது. அப்படியான தொழில்கள் என்ன என்பதை இங்கு காண்போம்.

சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட்

இன்றைய கால சூழ்நிலையில் பொருட்கள் விற்பனை செய்வதை விட அவற்றை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதுதான் பெரிய காரியம். எவ்வளவு தான் உற்பத்தி செய்த பொருள் தரம் வாய்ந்ததாக இருந்தாலும் மார்க்கெட்டில் அவற்றை மக்களிடம் சென்றடைய மேற்கொள்ளும் முயற்சியில் தான் அவற்றின் சக்சஸ் உள்ளது.

தற்போது சோசியல் மீடியா என்பது வெறும் புகைப்படங்களை ஷேர் செய்வது மட்டுமில்லை. பிராண்டிங், மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும் சோசியல் மீடியாக்கள் முக்கியக் கருவியாகத் திகழ்கின்றன. சோசியல் மீடியா மேலாண்மைக்கு இப்போது ஆள் கிடைப்பதே கடினமாக உள்ளது. அந்த அளவுக்கு இத்துறையில் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் மூலமாக நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

ஈவண்ட் பிளானர்!

திருமணம், அலுவலக கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள், பார்ட்டி கொண்டாட்டங்கள் மற்றும் சுற்றுலா பயணங்கள் போன்றவற்றை பிளான் செய்து அவற்றை செயல்படுத்துவதும் ஒரு முதலீடு இல்லா தொழில் தான். இதற்கு பெரிய மூலதனம் எதுவும் தேவையில்லை.

வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைவரும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய மூன்றாம் தரப்பை நாடுகின்றனர். இதற்காக அதிகம் செலவிடவும் செய்கின்றனர். எனவே இத்துறையில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். முதலில் தொழில் தொடங்கும் போது வாடிக்கையாளர்களைப் பிடிப்பது கடினமாக இருக்கும். ஆனால் இதில் ஓரளவுக்குப் பெயர் பெற்றுவிட்டால் நல்ல லாபம்தான்.

டியூசன் செண்டர்!

கல்வி என்பது மிகப்பெரிய செல்வம். குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் கடினப்பட்டு செல்வம் சேர்ப்பதில் மிகப்பெரிய பங்கு என்பது குழந்தைகளின் கல்விச் செலவிற்காக மட்டுமே. அப்படி பெற்றோர்கள் இரண்டு பேரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளின் படிப்பை கவனித்துக் கொள்ள பள்ளியையும் தாண்டி நிச்சயம் ஒரு ஆசான் தேவைப்படுகிறது. அதற்காகத் தான் டியூசன் சென்டர் அதிகளவில் காணப்படுகிறது.

அதனால் தான் குழந்தைகளை டியூசன் அனுப்புகின்றனர். டியூசன் செண்டர்களும் தற்போது பள்ளிகளை விட அதிகம் பீஸ் வாங்குகின்றன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. டியூசன் செண்டர் நடத்துவதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை. திறன் மட்டுமே இதில் மூலதனம். முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல தொழில் ஆகும்.

மார்க்கெட்டிங் தொழில்

நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். ஆனால் அதற்கு மார்க்கெட்டிங் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மார்க்கெட்டிங் என்பதே மிகச் சிறந்த தொழில்தான். அதில் வெற்றி கண்டவர்கள் ஏராளம். இதற்கு மிகப்பெரிய கல்வியறிவு என்பது அவசியமில்லை. ஆனால் அவற்றை மார்க்கெட் செய்து வாடிக்கையாளரை கவர்வது என்பதில் தான் உள்ளது.

உங்களிடம் ஒரு யோசனை இருந்தால் அதை நீங்கள் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்கிறீர்கள், எவ்வாறு கஸ்டமரை ஈர்க்கிறீர்கள் என்பதில்தான் விஷயம் உள்ளது. உங்களது ஐடியா மிகச் சிறந்த ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader