IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜீ திரை புதிய சேனல் தொடக்கம்

217

 

தமிழில் ஒளிபரப்பாகும்பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது, இந்நிறுவனம்தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு பிரிவில் – ‘ஜீ திரை’என்ற புதிய சேனலின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளது.

தென்னிந்தியாவில் இது, இந்த நெட்வொர்க்கின் ஆறாவது சேனலாகவும், ஜீ சினிமா சேனலை அடுத்து துவங்கப்பெற்ற இரண்டாவது சினிமா சேனலாகவும் திகழ்கிறது. ஜீ சினி அவார்ட்ஸ் 2020 நிகழ்ச்சியின் போது, இந்த சேனல் துவங்கப்பட்ட அறிவிப்பானது வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா சாம்ராஜ்யத்தின் மன்னராக கருதப்படும், உலக நாயகன் டாக்டர் கமலஹாசன் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட்டின் தலைமைநிர்வாக இயக்குனர் (உள்நாட்டு ஒளிபரப்புத் துறை) திரு. புனித் மிஷ்ரா ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர். இந்த சேனல் ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை முதல்நேயர்களுக்கு ஒளிபரப்பாகும்.

ஜீ திரை சேனலின் அறிமுகம் குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் சிஜூ பிரபாகரன் , ஜீ கன்னடா, ஜீ தெலுகு, ஜீ சினிமாலு, ஜீ தமிழ் மற்றும் சமீபத்தில் துவங்கப்பெற்ற ஜீ கேரளம் ஆகிய சேனல்கள் நமது நெட்வொர்க்கில் 28.5% மேலான பங்களிப்பினை வழங்குகிறது. இதன் மூலம் தென்னிந்திய மார்கெட்டில் நமக்கு உள்ள வலுவான இணைப்பு வெளிப்படுகிறது.

#Zee #Screen #New #Channel #Launcher