IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆப்பிளின் ஐஓஎஸ் சாதனங்களுக்காக யூடியூப்பில் புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான யூடியூப் ஆண்டிராயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான அப்ளிக்கேஷன்களையும் ஏற்கனவே தந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்ந நிலையில் யூடியூப் இணையத் தளத்தில் ஏற்கனவே தரப்பட்டுள்ள வசதி ஒன்றினை iOS சாதனங்களுக்கான யூடியூப் அப்ளிக்கேஷனில் அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி Picture in Picutre எனும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வசதியானது ஒரு வீடியோவினை சிறிய விண்டோவில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வேறு வீடியோக்களை தேடக்கூடியதாகவும் அல்லது வேறு ஒரு பணிகளை செய்யக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு முன் இந்த வசதி ஆண்டிராயிட் சாதனங்களிலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள iOS 14 இயங்குதளப் பதிப்பில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader