IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் ! புதிய சர்வே முடிவு

Get real time updates directly on you device, subscribe now.


இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தவராக மகேந்திர சிங் தோனி உள்ளார். ஆனால் தோனியை விட பிரதமர் நரேந்திர மோடிதான் இந்தியளவில் விரும்பப்படும் மனிதராக முதலிடத்தில் உள்ளார்.


யூகோவ் என்ற அமைப்பு உலகின் மிகவும் பிரபலமான மனிதர்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் சர்வே எடுத்து வெளியிடப்படுகிறது. இந்த சர்வே இணையத்தில் அதிகமாக தேடப்படும் அல்லது பிரபலமாக பேசப்படும் மனிதர்களை தேர்ந்தெடுத்து வெளியிடப்படும்.


இந்த சர்வேயில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பட்டியல் தயார் செய்யப்படுகிறது. 41 நாடுகளில் உள்ள 42 ஆயிரம் மனிதர்களை கொண்டு சர்வே எடுக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இந்திய அளவில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 6ம் இடத்தில் உள்ளார்.


இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இரண்டாம் இடத்தில் உள்ளார். ரத்தன் டாடா, நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
தோனியை புறக்கணிக்கிறதா இந்திய அணி ?


இந்திய பெண்கள் அளவிலான பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் முதலிடத்தில் உள்ளார். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இரண்டாம் இடத்திலும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், மறைந்த தலைவர் சுஷ்மா சுவராஜ், தீபிகா படுகோனே, சமூ ஆர்வலர் மலாலா, மிச்செல் ஒபாமா, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நடிகர் ஜாக்கி சான், சீன அதிபர் ஜி ஜின்பிங், அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
#NarendraModi #MSDhoni #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader