ரூபே, விசா மற்றும் மாஸ்டர் கார்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும் சில தகவல்கள்

Get real time updates directly on you device, subscribe now.

பொதுவாக நாம் அனைவருமே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உபயோகப்படுத்தி வருகிறோம். அந்த கார்டு- ல் ரூபே(rupay), வீசா(visa), மாஸ்டர் கார்டு(master card) என்று எழுதி வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த மூன்று பேர்களும் யார், என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரூபே, வீசா மாஸ்டர் கார்டு ஆகிய மூன்றுமே பேமென்ட் நெட்ஒர்க் கேட்வே. இந்த பேமென்ட் நெட்ஒர்க் கேட்வே என்பது நாம் எதாவது ஏடிஎம் – ல் சென்று பணம் எடுகிறோம் என்றால் நமக்கும் வங்கிக்கும் நடுவில் ஒரு மீடியேற்றராக இருந்து ட்ரான்ஸ்சாக்ஸனை முடித்து வைக்கிறது தான் இந்த கேட்வேயின் வேலை.

இந்த கார்டு ஒரு இந்தியன் டொமெஸ்டிக் கார்டு.சர்வீஸ் எல்லாமே ரொம்ப கிரெடிட்ஸ் ஆக இருந்தது. ஆனால் அதன் சர்வீஸ் விலை மிக அதிகமாக இருந்தது.இந்த சேவைக்கு ஒரு மாற்று வழி கொண்டு வர வேண்டும் என்று நினைத்த ஆர் பி ஐ….

இது நாம் இன்புட் ஆக கொடுக்க கூடிய பண மதிப்பை சர்வருக்கு எடுத்து சென்று அங்கிருந்து ஒரு அவுட்புட்டை அதாவது கேஷ் அல்லது கேஷ் டேபிடிட்டி இதை பிராசஸ் பண்ணுகிறது தான் இந்த பேமென்ட் நெட்ஒர்க்கின் வேலை. இந்த ரூபே, வீசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகிய மூன்றுமே ஒரு வகையில் பேமென்ட் நெட்ஒர்க் கேட்வே சர்வீஸ் தான்.

இந்த பேமென்ட் நெட்ஒர்க் கேட்வே ஏடிம்- க்கு மட்டும் தானா என்று கேட்டால் இல்லை. நாம் டிஜிட்டலாக பண்ண கூடிய எல்லா ட்ரான்ஸ்சாக்ஸன் மற்றும் டிஜிட்டல் பேமென்ட் எல்லாமே இந்த பேமென்ட் நெட்ஒர்க் கேட்வே ட்ரான்ஸ்சாக்ஸன் மூலமாக தான் பன்றாங்க.

இந்த சர்வீஸை தருபவைகள் இந்த கார்டின் வேலை. இதில் வீசா, மாஸ்டர் கார்டு ஆகிய இரண்டுமே அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதில் வீசாவின் ஹெட் குவாட்டர்ஸ் கலிபோர்னியாவில் உள்ளது. மாஸ்டர் கார்டு ஹெட் குவாட்டர்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளது.

வீசா

இந்த பேமென்ட் நெட்ஒர்க் கேட்வே சர்வீஸை முதலாவது வெளியிட்டது வீசா. இது உருவாக்க பட்ட ஆண்டு 1958 செப்டம்பர். அந்த வருடத்திலேயே இவர்கள் 60,000 கார்டுகளை கொடுத்து இருக்கிறார்கள்.

மாஸ்டர் கார்டு

மாஸ்டர் கார்டு 1966 – ல் மாஸ்டர் சேஞ் இன்டெர் பேங்க் கார்டு ஆக அறிமுகம் ஆனது. இது 1979- ல் மாஸ்டர் கார்டு ஆக அறிமுகம் செய்ய பட்டது. இந்த கார்டு இரண்டுமே உலகளவில் ஏற்று கொள்ள கூடிய கார்டு ஆக இருந்தது. முதலில் கிரெடிட் சர்வீஸை கொடுக்க கூடிய கார்டு ஆக இந்த இரண்டுமே இருந்தது.

ரூபே

இந்த கார்டு ஒரு இந்தியன் டொமெஸ்டிக் கார்டு. 2012- க்கு முன் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் தான் கிரெடிட் சர்வீஸை கொடுக்க கூடிய கார்டு ஆக இருந்தது. 2012 மார்ச் 26 இல் ரூபே கார்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் இவர்கள் கொடுத்த சர்வீஸ் எல்லாமே ரொம்ப கிரெடிட்ஸ் ஆக இருந்தது. ஆனால் அதன் சர்வீஸ் விலை மிக அதிகமாக இருந்தது. இந்த வெளிநாட்டு சேவைக்கு ஒரு மாற்று வழி கொண்டு வர வேண்டும் என்று நினைத்த ஆர் பி ஐ 2009 – ல் இந்தியன் பேங்க் அஸோஸியேஷனிடம் நமக்கு Secured -ஆகவும் காஸ்ட் எபக்ட்டிவ் ஆகவும் நம்ம மக்களுக்கு டெபிட் சர்வீசஸ் கொடுக்க கூடிய நெட்ஒர்க் கேட்வே சர்வீஸ் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதன் விளைவாக தான் 2012 மார்ச் 26 இல் ரூபே கார்டை NPCI இந்தியாவில் உருவாகினார்கள். முதலில் இதை ஒரு டெபிட் சர்வீஸ் ஆக கொண்டு வந்தனர். 2017 – ல் கிரெடிட் சர்வீஸை கொண்டு வந்தார்கள். இந்த ரூபே கார்டை NPCI மற்றும் ஆர் பி ஐ கொண்டு வர இன்னொரு முக்கிய காரணம் இந்தியாவுக்கு என்று ஒரு பேமென்ட் சர்வீஸ் வேண்டும் என்பதற்காக தான்.

மேலும் இந்த வீசா, மாஸ்டர் கார்டு ஆகிய இரண்டுமே வெளிநாட்டை சேர்ந்த கம்பெனிகள். இது எந்த ஒரு சிறிய பிரச்சனை வந்தாலும் உடனே சட்டவுன் ஆக அதிக வாய்ப்பு உண்டு. இதனால் நாம் ஏடிம் -ல் பணம் எடுக்க முடியாம போகலாம் இன்னும் பல பிரச்சனைகள் வரலாம். ஆகவே இதிலிருந்து தப்பிக்க தான் இந்த ரூபே கார்டை அறிமுகம் செய்தது.

மேலும் இந்த வீசா, மாஸ்டர் கார்டு ஆகிய இரண்டுமே வாங்க கூடிய ட்ரான்ஸ்சாக்ஸன் சார்ஜ் மிக அதிகம் ரூபே கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது. வீசா மற்றும் மாஸ்டர் கார்டை ஒப்பிட்டு பார்கும் போது இந்த ரூபே கார்டு ட்ரான்ஸ்சாக்ஸன் ரொம்ப பாஸ்ட் ஆகவும் இருக்கும்.

ஏனெனில் இந்த ரூபே இந்தியாவிற்குள் நடைபெறும் பணப்பரிமாற்றுமுறை ஆனால் வீசா மற்றும் மாஸ்டர் கார்டு இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் பணப்பரிமாற்றுமுறை. ரூபே கார்டை பொறுத்தவரை இது இந்தியன் டொமெஸ்டிக் கார்டு இந்தியாவிற்குள் மட்டும் 97% டொமெஸ்டிக் பேமென்ட்டை ஏற்று கொள்கிறது. அதை தாண்டி கிட்டத்தட்ட 2,00,000 ஏ டி ம் -ல் இந்த கார்டு ஏற்று கொள்ளப்படுகிறது.

இந்த கார்டு சேவையை இந்தியாவை தாண்டி பூடான் மற்றும் சிங்கப்பூரில் 2018- ல் உருவாக்கி இருக்காங்க. இந்த வருடம் அதாவது 2019 -ல் மாலத்தீவில் உருவாக்கி இருக்காங்க. அதையும் தாண்டி டிஸ்கவர் போன்ற பல இன்டெர்நேஷனல் பேமென்டில் இந்த சர்வீசை டை அப் பண்ணி இருக்காங்க.

இந்த சர்வீசை கொடுப்பதற்காக வீசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகிய இரண்டுக்குமே பேங்க் -ல் என்ட்ரி பீஸ் மற்றும் காலாண்டு பீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் ரூபே இந்தியன் டொமெஸ்டிக் கார்டு ஆக இருப்பதினால் இதுக்கு எந்த விதமான என்ட்ரி அல்லது காலாண்டு பீஸ் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. இதனால பேங்க்கு ப்ரோபைட் தான். இதனால இப்ப உள்ள பாங்கில் எல்லாம் அதிகமாக ரூபே கார்டு தான் கொடுகிறார்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More