பேய் மிளகாயின் குணாதிசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

0
20

பூத் ஜுலோகியா இது தான் இந்த தாவரத்தின் பெயர். ஆங்கிலத்தில் கோஸ்ட் பெப்பர்.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் இவை அதிகமாக வளர்கின்றன.

பொதுவாக காரத்தின் அளவை குறிப்பிடுவதின் பெயர் ஸ்கோவிலிங் ஹீட் யுனிட். சராசரியாக ஒரு சாதாரணமான மிளகாயின் அளவு 25000 யுனிட் இருக்கும். ஆனால் இந்த பேய் மிளகாயின் அளவு 10 லட்சத்து 41 ஆயிரம் யுனிட்டில் இருக்கும்.

உலகத்திலேயே இதுதான் மிகவும் காரமான மிளகாய் என 2006ம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

 

பொதுவாக இந்த மிளகாய் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே விளையும். அதிலும் இது சிவப்பு கலரில் மட்டுமே விளைகின்றன.

அதிலும் சில வகைகள் உள்ளன. அது மஞ்சள், வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் காரம் என்றால் சிவப்பு கலர் மட்டும் தான்.

பொதுவாக இந்த மிளகாய் 2 அல்லது 3 இன்ச்சில் தான் இருக்கும். அதிலும் இரண்டு வகைகளில் காணப்படும்.

ஒன்று தடிமனான தோல் கொண்டவை. மற்றொன்று மெல்லிய தோள் கொண்டவை.

ஆனால் இரண்டுமே காரம் அதிகமாக இருக்கும். அதிகமான அளவில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதிகளவில் ஊறுகாய் மற்றும் சட்னி செய்வதற்கு பேய் மிளகாய் பயன்படுகின்றன.

குறிப்பாக சீனா போன்ற நாடுகளில் கறி அல்லது மீன்களில் அரைத்து பொடி செய்து அதன் மேல் தடவி பொறித்து சாப்பிடுகின்றனர்.

சில ஊர்களில் அதனை அரைத்து பொடியாக்கி குழம்புகளில் லேசாக தூவி பயன்படுத்து கின்றனர்.

பொதுவாக இவை அசாம் மாநிலங்களில் அதிகளவில் விளைய வைத்து அங்கு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு நாகா ஜுலோகியா என பெயரும் வைத்துள்ளனர்.

நாகா என்பது விஷப்பாம்பு. விஷம் போன்று இதில் காரம் அதிகமாக காணப்படுமாம்.

இந்த மிளகாயினை கடித்தவுடன் காரம் தெரியாது. முதலில் லேசாக இனிப்பது போன்று தோன்றும். கடித்த 45 நொடிகளுக்கு பிறகு தான் அதன் காரத்தன்மை முழுமையாக வெளிப்படுத்தும்.

ஒரு மிளகாயை நாம் சாப்பிட்டோம் என்றால் விக்கல் வரும். வேர்த்து கொட்டும். மூச்சுத்திணறல் ஏற்படும். செரிமான பகுதியை புண்ணாகிவிடும். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மரண எரிச்சல் ஏற்படும்.

 

பேய் மிளகாயினை சாப்பிடுவதற்கு மட்டுமின்றி வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

வடகிழக்கு மாநிலத்தின் காட்டு எல்லைப்பகுதியில் இந்த மிளகாயினை நசுக்கி வேலியில் வைத்துவிடுவார்கள்.

இது யானை போன்ற மிருகங்களுக்கு இந்த மிளகாயின் நெடி தாங்காமல் ஓடி விடுமாம்.

இந்த மிளகாயினை இந்திய ராணுவமும் பயன்படுத்துகின்றனர். கண்ணீர் புகை குண்டில் இவற்றினை கலந்து எரிந்தால் கண் எரிச்சல் ஏற்பட்டு கலவரத்தினை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம் என 2009ம் ஆண்டு முதல் இதனை பயன்படுத்துகின்றனர்.

2015ம் ஆண்டு ஒரு தீவிரவாத குழு ஒன்று ஒரு குகையினுள் ஒளிந்து கொண்டனர். ஆனால் நம் ராணுவத்தினரால் உள்ளே நுழைய முடியவில்லை.

உடனே பேய் மிளகாயினை பொடியாக்கி கண்ணீர் புகை குண்டினுள் கலந்து குகைக்குள்ளே எரிந்துள்ளனர். மிளகாயின் எரிச்சல் தாங்கமுடியாமல் தீவிரவாதிகள் அனைவரும் கத்திக் கொண்டே வெளியே வந்துள்ளனர்.

 

1.5 கிலோ அளவில் உள்ள மிளகாயினை 80 கிலோ எடையுள்ள மனிதர் ஒருவர் சாப்பிட்டால் உயிர் போகவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் இருப்பினும் சாதனை என்ற பெயரில் இதனை சாப்பிடவும் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.