IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கர்நாடக சட்டப்பேரவையில் சாதித்தார் எடியூரப்பா!

13


கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா வெற்றி பெற்றார்.


கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை இன்று கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். முதல்வர் எடியூரப்பாவின் பதிலுரைக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.


நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு காங்கிரஸ் – மஜத கூட்டணி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.


பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பாவிற்கு 105 பாஜ.க. எம்.எல்-க்கள். மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவு அளித்தனர்.