IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

க்ஸார்வியோ டிஜிடல் வேளாண் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் விவசாயிகளுக்கான ஸ்கௌடிங்க் செயலி

Get real time updates directly on you device, subscribe now.


பிஏஎஸ்எஃப் நிறுவனத்தின் க்ஸார்வியோ டிஜிடல் ஃபார்கிங்க் சொல்யூஷன்ஸ் இந்தியாவிலுள்ள விவசாயிகளுக்காகத் தனது ஸ்கௌட்டிங்க் ஸ்மார்ட்ஃபோன் செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. க்ஸார்வியோ ஸ்கௌட்டிங்க் செயலி உடனடி நிழற்பட அங்கீகாரம், வழிமுறை, தரவு பகிர் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, விவசாயிகள் மற்றும் உழவியல் நிபுணர்கள் தங்கள் நிலங்களளிலுள்ள களை மற்றும் நோய் அச்சுறுத்தலை அடையாளம் காண உதவும். அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியாவின் ஆக்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான யுலிங்க்அக்ரிடெக் நிறுவனத்துடனான புதிய கூட்டாண்மை ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.


இது குறித்து பிஏஎஸ்எஃப், குளோபல் கமர்ஷியலைசேஷன் க்ஸார்வியோ ஆசியா டைட்ரிக் மெர்டென்ஸ் கூறுகையில் ‘இந்தியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களின் தரத்தை மேம்படுத்துவதுடன், விளைச்சலை அதிகரிக்கவும், புதிய முறைகளை ஏற்றுக் கொள்வதிலும் ஆர்வமாக இருப்பதை நாங்கள் அறிவோம். எனவே புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள க்ஸார்வியோ ஸ்கௌட்டிங்க் மற்றும் அக்ரோ ஸ்டாருடனான எங்கள் புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவிலுள்ள கோடிக் கணக்கான விவசாயிகளுக்குப் புதிய டிஜிடல் வேளாண் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.


பயிர் ஆய்வுக்குக் கால நேரம் அதிகம் என்பதுடன் விரிவான அறிவும் தேவைப்படும். க்ஸார்வியோ ஸ்கௌட்டிங்க் செயலி நிலங்களை அச்சுறுத்தும் களைகளையும், நோய்களையும், திறமையாகக் கண்டுபிடிக்க இந்தியா விவசாயிகளுக்கு உதவுவதுடன், ஸ்மார்ட்ஃபோந் மூலம் படமெடுத்து இலைகளுக்கு ஏற்படும் சேதங்களையும் கணக்கிட முடியும். மேலும் சமூக அடிப்படையிலான ரேடார் இயக்கம் தங்கள் நிலங்களைச் சுற்றி எங்கெல்லாம் அச்சுறுத்தல்கள் உள்ளனவோ அவற்றைத் தெளிவாகக் காட்டும். மேற்கண்ட தகவல்களுடன் விவசாயிகள் துல்லியமாகப் பிரச்சினைகளைக் ஆய்வு செய்து தேவையான தீர்வுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.


மெர்டென்ஸ் மேலும் தொடர்கையில் ‘க்ஸார்வியோ ஸ்கௌட்டிங்க்கைப் பயன்படுத்தித் தங்கள் பயிர்கள், களைகள் மற்றும் பூச்சிகளின் படங்களை அனுப்பும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், செயலியின் துல்லியத்தை மேலும் மேம்படுத்தி அடையாளம் கண்டுபிடிக்கும் அளவுகளை இன்னும் அதிகரிக்கலாம்’ என்றார்.


ஸ்கௌட்டிங்க் செயலியைத் தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கும் விவசாயிகள் டிஜிடல் பொருளைத் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பயன்படுத்த முடியும். விரைவில் மற்ற மொழிகளிலும் கிடைக்க வழிவகுக்கப்படும். செயலியின் விரிவான தேர்வான அரிசி, பருத்தி, சோளம், சோயா ஆகிய முக்கியப் பிராந்தியப் பயிர்கள் மற்றும் சிறப்புப் பயிர்களின் பயனையும் பெறலாம். பிஏஎஸ்எஃப் வேளாண் தீர்வுகள் பிரிவின் ஓர் அங்கமான க்ஸார்வியோ டிஜிடல் ஃபார்மிங்க் சொல்யூஷன்ஸ் டிஜிடல் பொருள்களின் ஒரு பகுதியாக க்ஸார்வியோ ஸ்கௌட்டிங்க் விளங்குகிறது. கூகிள் ப்ளே அல்லது அப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் இந்தச் செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.xarvio.com.


#Xarvio #Farmers Introducing #Digital #Agricultural #Solutions

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader