IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நெஞ்சை பதற வைக்கும் கொரோனாவின் பலி 2 லட்சத்தை நெருங்கியது

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பெரும் ஆட்கொல்லியாக விளங்கி வரும் கொரோனா வைரசை கண்டு உலகமே ஆடிப்போயுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை இழந்து வேலை இழந்து, உண்ண உணவின்றி தவித்து மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் போராடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உலகமெங்கும் சுமார் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்ப்பலியிலும் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி வருகிறார்கள். நியூயார்க் மாகாணத்தில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். அமெரிக்காவில் நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் 2,139 பேர் பலியானதாக பதிவாகி உள்ளது. அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் இது 600 குறைவு என தகவல்கள் சொல்கின்றன.

இத்தாலியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் 21 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோரும், பிரான்சில் 21 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரும், இங்கிலாந்தில் 18 ஆயிரத்து 100-க்கும் மேலானோரும் இறந்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader