IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

டிரம்ப்பிற்கு மனநல சோதனை நடத்த அவசியம் இல்லை – வெள்ளை மாளிகை

டிரம்ப்பிற்கு நேற்று அவருக்கு முதல்முறையாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அவருக்கு மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவர் மனநல ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கடந்த ஒருவாரமாக சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக இருக்கும் எல்லோரும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். கணக்குப்படி பார்த்தால் டிரம்ப் இந்த மருத்துவ சோதனையை முன்பே செய்து இருக்க வேண்டும். நேற்று நடந்த இந்த மருத்துவ சோதனையின் முடிவு 12ம் தேதி வெளியாகும். இது இணையத்தில் அனைவரும் பார்க்கும்படி…

பராகுவே நாட்டில் பியர் அழகு நிலையம் – களைகட்டும் கூட்டம்

பராகுவே நாட்டில் பியர் மதுபானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு அழகு நிலையம் தொடங்கப்பட்டிருக்கிறது. குளிப்பது, முகத்தில் பேசியல் செய்வது, மெனிக்கியூர், பெடிகியூர் செய்வது, முடியை சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது... என அனைத்திற்கும் பியரை தான் பயன்படுத்துகிறார்கள். சோப்பு, ஷாம்பு, தண்ணீர், அழகு கிரீம்கள் என அனைத்திலும் பியர் பானத்தை கலந்திருப்பதால், இந்த அழகு நிலையம் வித்தியாசப்படுகிறது. மற்ற அழகு நிலையங்களை விட செலவு அதிகம் என்றாலும், பியர் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறதாம். அதனால் பியர் அழகு நிலையத்தில் கூட்டம்…

ஸ்வீடன் நாட்டில் வித்தியாசமான உருவங்களில் ஐஸ் ஹோட்டல்

ஸ்வீடன் நாட்டில் சுக்கச்ஜர்வி என்ற கிராமத்தில் உள்ள ஐஸ் ஹோட்டல் மிகவும் புகழ் பெற்றது. முழுக்க முழுக்கப் பனிக்கட்டியைக் கொண்டு இந்த ஹோட்டல் 30,000 கன மீட்டர் பனி மற்றும் பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோரு ஆண்டும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஹோட்டல் வடிவமைக்கப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பனிக்கட்டியைக் கொண்டு அழகான வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள். கதகதப்பாக ஆறு முதல் எட்டு வாரங்களில் அற்புதமான வடிவமைப்புத் தயாராகிவிடுகிறது.

டிரம்பிற்கு காலையில் பல் விளக்க கூட பயம் : மரணபயத்தை காட்டிட்டானுங்களே..

அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டு டிரம்ப்பும் கிம்மும் உலகத்தையே மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். டிரம்ப் குறித்து மைக்கேல் வுல்ப் என்ற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கும் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்ற புத்தகத்தில் தான் இந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. டிரம்ப் எப்படி எல்லாம் தன்னுடைய உயிரை காத்துக் கொள்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர் தன்னுடைய பல் துலக்கும் பிரஷ் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறார். யாரும் தன்னுடைய பிரஷை கையால் தொடக்கூடாது என்று விதி வைத்து இருக்கிறார்.…

பனியால் உறைந்து போன நயாகரா – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போயிருக்கிறது. நியுயார்க் உள்ளிட்ட நகரங்களில் பனிப்போர்வை போர்த்தியுள்ள நிலையில் சுற்றுலாத் தலமான நயாகராவுக்கு வரும் பயணிகள் அங்கு வெறும் வெண்பனி மூடிய கோலத்தைக் கண்டு திகைக்கின்றனர். எங்கும் தண்ணீர் சிதறும் அந்த பகுதி பனிக்கட்டிகளாலும் மூடுபனிகளாலும் சூழப்பட்டு அன்டார்டிகா பிரதேசம் போல காட்சியளிக்கிறது. சிறிய அளவே தண்ணீர் ஐஸ்கட்டிகள் மீது வழிவதை பலர் செல்போன்களில் படம் எடுத்துச் செல்கின்றனர்.

30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம்

பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று சாக்லேட். சாக்லேட்டில் இனிப்பு சுவை இயற்கையில் கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ் சாக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் செய்யப்படுகிறது. கொக்கோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சாக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி…

2018ல் 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்படும் – அதிர்ச்சி தகவல்

புத்தாண்டு தொடங்கியதுமே 2018ல் நமக்காக காத்திருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கை பீதியை கிளப்பி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ பவுல்டா் பல்கலைக் கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், 2018ம் ஆண்டில் அதிகளவு நிலநடுக்கங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள பிற அதிர்ச்சித் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. ‘பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதன் காரணமாக, மையவிலக்கு விசை குறைந்து, பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகும். இதனால்,…

ஒரு ஸ்விட்ச் அழுத்தினால் உலகின் எந்த நாட்டையும் தாக்க முடியும் – கிம் ஜாங்

அணு ஆயுத போர் குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்து இருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங். உலக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதுவரை சாதாரணமாக மிரட்டல் விடுத்துக் கொண்டு இருந்த கிம் ஜாங் இந்த முறை பெரிய அணு குண்டு ஒன்றை தன் அறிவிப்பின் மூலம் போட்டு இருக்கிறார். அதன்படி தன்னுடைய மேசையில் அணுகுண்டை கட்டுப்படுத்தும் ஸ்விட்ச் இருக்கிறது என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார். மற்றவர்களுக்கு புத்தாண்டு எப்படி தொடங்கியதோ தெரியவில்லை, வடகொரியா மக்களுக்கு பெரிய பீதியுடனே தொடங்கி இருக்கிறது.…

ஆண் நண்பர்கள் விற்பனை கடை : குவிந்த பெண்கள் கூட்டம்

சீனாவில் ஆண் நண்பர்கள் இல்லாத பெண்களுக்காக கடை ஒன்று திறக்கப்பட்டதால் அங்கு பெண்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. #Handsome #bachelors #celebrateChristmas சீனாவின் ஹைகொ பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஷோ ரூம்பில் 6 அழகான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்கள் ஒரு பெட்டியின் உள்ளே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சரசாரியாக 6 அடி உயரம் இருந்தனர். இதனால் இந்த வருடம் அவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த ஷோ…

இயேசு மீண்டும் பிறப்பாரா ? வானத்தில் தோன்றிய நட்சத்திர பிழம்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலகலமாக நடந்து வரும் நிலையில், வானத்தில் வண்ணமயமான நட்சத்திர ஒளிப்பிழம்பு தோன்றியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.. இயேசு கிறிஸ்து இந்த பூவுலகில் பிறக்கும் போது வானத்தில் இருந்து நட்சத்திரம் ஒன்று தோன்றியதாக கிறித்துவ வேதநூல்கள் கூறுகின்றன. அதை நினைவுபடுத்தும் வகையிலே கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் வீடுகளில் ஸ்டார் கட்டி தொங்கவிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் அதே வேளையில், வானத்தில், நட்சத்திர ஒளி பிழம்புகளை நாசா ஆய்வு மையம்,…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader