IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

ராபர்ட் ஓ பிரயனை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இவர் பிணைக்கைதிகள் விவகார சிறப்பு தூதராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. #US #National Security Advisor #Appointment

புறா மோதியதால் ஸ்ரீலங்கன் விமானம் இஞ்சின் பதிப்பு

கொழும்புவில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் விமானம் தரை இறக்கும் போது அதன் இஞ்சின் பக்கத்தில் புறா ஒன்று மோதியது. ஆனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விமானம் தரையிறங்கியது. ஆனால் புறா மோதியதன் காரணமாக விமானத்தின் இஞ்சினில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொறியாளர்கள் வந்து பாதிப்பை சரி செய்தனர். பின்னர் மீண்டும் 62 பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டது. #SriLankan #flight #engine #Edition

நாங்களும் போவோம்ல… – எடப்பாடியரைத் தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாட்டு பயணம்

முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்தைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் முதலீடுகளை கவர்வதற்காக லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, சி.செங்கோட்டையன் ஆகியோரும் உடன் சென்றனர். இந்த பயணத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதினங்களுக்கு முன் நாடு

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.30 கோடி!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர உடையார் கோயில் நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. அந்த சிலையின் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். அவை ஆஸ்திரேலியாவில் மீட்க்கப்பட்டுள்ளன. #30crore #worth #statue #recovered #Australia

ஜான்போல்டனை நீக்க அதிரடி உத்தரவு: ட்ரம்ப்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுடனான வெளியுறவு கொள்கைகளில் சரியாக செயல்படாததால் இவர் நீக்கப்பட்டுள்ளார். #remove #Janbolden #Trump #order

செப்டம்பர் 11 தாக்குதல் – இன்றும் கேள்விக்குள்ளாகும் சில சந்தேகங்கள்

இரண்டாம் உலகப் போரில் பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பின்பு அமெரிக்கர்கள் சந்தித்த மிகப்பெரிய கோரத் தாக்குதல் தான் இரட்டை கோபுர இடிப்பு. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலகின் தூங்க நகரம் என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரம் வழக்கம்போல் தன் புத்துணர்ச்சியான காலைப் பொழுதை கழிக்க ஆரம்பித்தது. அன்றைய தினத்தின் உலக பொருளாதாரத்தை கணக்கிட, 110 மாடிகள் கொண்ட உலக வர்த்த மைய இரட்டை கட்டிட அலுவலகங்களும் தன் பணியை ஆரம்பித்தது. சரியாக காலை 8.46 மணி அளவில் வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்கு கோபுரத்தின் 93 மற்றும் 99

ஹரியானாவில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறியுள்ளார். #Bahujan #Samaj #Competition #Haryana

பாகிஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கம்

மொகரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனால் அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. #Internet #services #freeze #Pakistan

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த 10 கோடி பன்றிகள்

உலகில் உள்ள 50 சதவீத பன்றிகளுக்கு சீனா வாழ்விடமாக உள்ளது. சர்வதேச அளவில் பன்றி இறைச்சிக்கான மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீன மக்களின் பிரதான உணவாகவும் பன்றி இறைச்சி இருந்து வருகிறது. இந்நிலையில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 கோடிக்கும் அதிகமான பன்றிகள் பலியாகி உள்ளது. இதை அடுத்து அவசர காலத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட பன்றி இறைச்சியை சீன அரசு விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #swine #flu #10crore #pigs #death

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader