IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

அமெரிக்காவைத் துரத்தும் கொரோனா பலி – டிரம்ப் வேதனை

உலக நாடுகளில் கொரோனாவின் பலிக்கு அமெரிக்காவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 2,502 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 61,656 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர். இவற்றில் பாதிப்பு எண்ணிக்கையில் நியூயார்க் (3,06,158 பேர்) மற்றும் நியூஜெர்சி (1,16,264 பேர்) நகரங்கள் முன்னணியில் உள்ளன.  இந்நகரங்களில் முறையே 23…

சீனாவில் 90 லட்சம் செல்போன்கள் சுவிட்ச் ஆப்! திடுக்கிடும் தகவலால் உலக நாடுகள் அச்சம்

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா தற்போது 125 நாடுகளை ஆட்டிப்டைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு அதிகரிக்கக ஆரம்பித்துள்ளது. முன்னதாக கணக்கிடப்பட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது எனவும் சுமார் 50 சதவீதம் அளவிற்கான மரணத்தை கணக்கிலிடத் தவறிவிட்டதாக சீனா அரசு சமீபத்தில் ஒப்புக்கொண்டது. தற்போது சீனாவில், 82,816 பேர் பாதிக்கப்பட்டு, 4,632 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹாங்காங் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது…

கொரோனா பலியானவர்களில் இந்தியர்களே அதிகம் – இங்கிலாந்தில் அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் உயிர்பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு ஆஸ்பத்திரிகளில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை, கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 918 ஆகும். அவர்களில் இனவாரியான புள்ளிவிவரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2.1 சதவீத பாகிஸ்தானியரும்,…

நெஞ்சை பதற வைக்கும் கொரோனாவின் பலி 2 லட்சத்தை நெருங்கியது

சீனாவிலிருந்து பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பெரும் ஆட்கொல்லியாக விளங்கி வரும் கொரோனா வைரசை கண்டு உலகமே ஆடிப்போயுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை இழந்து வேலை இழந்து, உண்ண உணவின்றி தவித்து மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் போராடி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உலகமெங்கும் சுமார் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்ப்பலியிலும் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.…

கொரோனாவால் 4 கோடி தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் – உலக வங்கி அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தியதில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால், நான்கு கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது. இவ்வங்கி, 'கொரோனாவால் மறுகுடியோரின் பிரச்னை' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலைவாய்ப்பை…

க்ரீன்கார்டுக்கு ஆப்பு! அமெரிக்க இந்தியர்களின் கதி இனி என்னவாகும் தெரியுமா?

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன்கார்டுகள் வழங்குவதை அடுத்த 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்ப்படுவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். உலகளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தினமும் 2000-த்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அமெரிக்கா நிலைகுழைந்து தடுமாறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான…

கிம் ஜங் உன் உடல்நிலை கவலைக்கிடம் – வட கொரிய அதிபராக தயாராகும் தங்கை கிம் யோ ஜங்

வடகொரியாவில் அதிபர் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்களை அடுத்து அவரது இடத்தில் அவரது தங்கை கிம் யோ ஜங் அமர்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் ஜிம் ஜங் உன்னின் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர் வழக்கமாக அவரது தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில்தான், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்…

11 வருஷம்… 115 நாடு! வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை!

கசி அஸ்மா அஸ்மெர்ரி எனும் 33 வயது வங்காள தேச பெண்மணி 11 வருடங்களில் 115 நாடுகளைச் சுற்றியுள்ளார். வங்காள தேசத்தின் குல்னா எனும் சிறிய நகரத்தில் பிறந்த இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 2007ம் ஆண்டில் கசியின் பக்கத்து வீட்டுப் பெண், நீ பெண்ணாக இருப்பதால் கல்யாணத்துக்குப் பிறகு ஊர் சுற்ற முடியாது. என் மகன் இப்பவே 5 நாடுகளுக்கு போய் வந்து விட்டான், என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இதனால் மனம் வருந்திய கசி, ஏன் ஒரு பெண்ணால் உலக நாடுகளுக்குச் செல்ல முடியாது? என்று தன்னுள் கேள்வி எழுப்பினார். அதன் தொடர்ச்சியாக உலகில்

கொரோனாவிற்கு புதிய பெயர் : உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கொரோனா வைரசிற்கு கோவிட் 19' (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1110 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த காய்ச்சலுக்கு 42,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் காய்ச்சலை சரிப்படுத்தும் சிகிச்சை முறைகள் பயனளிக்கவில்லை. சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் வைரஸ்…

பாரம்பரிய முறையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர் வேத முறைப்படி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் 16 நாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், வராமல் காக்கவும் இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத முறையில், மருத்துவர்கள் விஷாரி என்ற மருந்தினைக் கண்டறிந்துள்ளனர். உயிரைக் கொல்லும் ஹச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை வைரஸ்களே இந்த நோய்க்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader