IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தகர்ப்பு – 19வருடங்களுக்கு பின்பு எழும் சில சந்தேகங்கள்

உலகின் தூங்க நகரம் என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரம் வழக்கம்போல் தன் புத்துணர்ச்சியான காலைப் பொழுதை கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் கழிக்க ஆரம்பித்தது. அன்றைய தினத்தின் உலக பொருளாதாரத்தை கணக்கிட, 110 மாடிகள் கொண்ட உலக வர்த்த மைய இரட்டை கட்டிட அலுவலகங்களும் தன் பணியை ஆரம்பித்தது. சரியாக காலை 8.46 மணி அளவில் வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்கு கோபுரத்தின் 93 மற்றும் 99 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் திடீரென விமானம் ஒன்று அதிபயங்கர வேகத்துடன் மோதிய போது சற்றும் எதிர்பாராத பொதுமக்களும் ஊடகங்களும் விமானம்,…

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க விலகல் – அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா தடாலடியாக விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மே மாதம் அதிரடியாக தெரிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதியை நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன்…

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஹாங்காங்கிலும் டிக் டாக் நிறுத்த நடவடிக்கை

ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை செய்வது குறித்து ஆலோசணை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் தடைசெய்யப் பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை…

இந்தியாவை நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை நேசிப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தை ஒட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் டிரம்ப் அவரது மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார். படை வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில், விமானங்கள் வானில் அணிவகுந்து மரியாதை செலுத்தின. இரவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்ணைக் கவரும் வகையிலான பட்டாசுகளை வெடித்து சுதந்திர தினம்…

சூரியனை விட மிகப்பெரிய மர்மப்பொருள் விண்வெளியில் கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் ஆய்வு

விண்வெளியில் புவியீர்ப்பு நுண்ணலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் பீசா (PISA) நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப் பொருள் சிறிய அளவிலான கருந்துளை அல்லது மிகப் பெரிய நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என அனுமானித்துள்ளனர். அந்த மர்மப் பொருள் நமது சூரியனை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

இந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு – ஐ.நா.எச்சரிக்கை

வருகின்ற ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்கிப் பெருகிய வெட்டுக்கிளிக் கூட்டம் அங்கிருந்து அரேபியப் பாலைவனத்துக்கு வந்து பாகிஸ்தான் வழியாக மே மாதத்தில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பில் உள்ள பயிர்கள் வெட்டுக்கிளிப் படையெடுப்பால் சேதமடைந்துள்ளன.…

தவறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர் டிரம்ப் – முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்

அமெரிக்காவின் மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை அடுத்து அமெரிக்காவில் பெரும் கலவரம் வெடித்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் பிலடெல்பியாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜார்ஜ் கொலை குறித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, நாம் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அதிக வலியில் உள்ளோம். இந்த நிலையில் தற்போது நமக்கு மேலும் வலி வேண்டாம். நடந்து முடிந்த பிரச்னை குறித்து விரிவான அலச வேண்டும் டிரம்பின் நிர்வாகத் திறமை இன்மை மற்றும் கவனக் குறைவால்தால்…

வாயை மூடி இருங்கள்! அதிபர் டிரம்பிற்கு அமெரிக்க காவல்துறை தலைவர் எச்சரிக்கை

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்துவருகின்றன. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு காவல் துறை திணறி வருகிறது. இதனிடையே ஜூன் 1 ம் தேதி மாகாண ஆளுநர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் , நீங்கள் ஆதிக்கம் செலுத்தாவிட்டால் , நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம் என்றார். இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ஹூஸ்டன் காவல் துறைத் தலைவர் ஆர்ட்…

கொரோனா அச்சமின்றி மசூதிகள் திறப்பு

உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொரோனா வைரஸ் பயமின்றி சவுதி அரேபியா மற்றும் ஜெருசலேம் ஆகிய நாடுகளில் 2 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த மசூதிகள் வழிபாட்டிற்காக இன்று திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியிலிருந்து சவுதி மற்றும் ஜெருசலேம் நாடுகளில் மசூதிகள் மூடப்பட்டன. கடந்த இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சவுதியில் உள்ள 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் திறக்கப்பட்டன. அதே…

உலக சுகாதார அமைப்புடனான உறவை அதிபர் டிரம்ப் துண்டிக்க காரணம் என்ன?

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஒலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் இருப்பதால் அந்த அமைப்புடனான உறவை மொத்தமாக துண்டித்துக் கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்கா கடுமையான அளவில் பாதிக்கபட்டுள்ள்து. இந்த வைரஸ் தாக்குதல் குறித்துச் சரியான நேரத்தில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளிக்காமல் சீனாவுக்கு ஆதரவாக இருந்ததால் உலகெங்கும் கொரோனா பரவியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டி…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader