IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உலகின் மதிப்பு மிகுந்த கரன்சிகள் !

Get real time updates directly on you device, subscribe now.

உலகில் தற்போது 195 நாடுகள் உள்ளன. இவை அனைத்துக்குமாக சுமார் 150 வகையான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் (கரன்ஸி நோட்ஸ்) உள்ளன.

ஏனெனில் ஒரே கரன்ஸி நோட்டுகளைப் பயன் படுத்தும் பல்வேறு நாடுகளும் உண்டு! டாலர், பவுண்ட், தினார், யூரோ போன்றவை பல நாடுகளின் கரன்ஸிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் கரன்ஸி நோட்டுகள் வெவ்வேறு பெயர்களிலும், வெவ்வேறு வடிவங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம் !

குவைத் தினார்

அரபு நாடான குவைத்தின் நாணயம் குவைத் தினார். இதுவே உலகின் மதிப்பு மிகுந்த நாணயம். ஒரு குவைத் தினார் சுமார் 242 . 94 இந்திய ரூபாய்க்குச் சமம்.
பஹ்ரைன் தினார் மதிப்பு மிகுந்த இரண்டாவது நாணயம்! ஒரு பஹ்ரைன் தினாருக்கு சுமார் 195 . 45 இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும்!

தினாரைப் பயன்படுத்தும் சில நாடுகள் !

அல்ஜீரியா, இராக், லிபியா, துனீஷியா யூகோஸ்லேவியா, மாஸிடோனியா, செர்பியா போன்ற நாடுகள் தினாரைப் பயன்படுத்துகின்றன.

நாணய மதிப்பின் அடிப்படையில் உலகளவில் பத்தாம் இடத்தில் இருந்த போதிலும் உலகின் பாதுகாப்பான நாணயமாக பயன்படுத்தப்படுவதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டாலர்கள்தான்!

ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், ஆபிரகாம் லிங்கன், அலெக்ஸாண்டர், ஹாமில்டன், ஆண்ட்ரூ ஜாக்சன், யூலிஸிஸ் எஸ்.கிராண்ட் ஆகியோரின் முகப் படங்கள் அமெரிக்க டாலரில் பயன்படுத்தப்படுகின்றன.

டாலரைப் பயன்படுத்தும் வேறு சில நாடுகள் !

ஆன்டிகுவா – பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பார்படோஸ், பெலிஸ், பெர்முடா, புருனே, கனடா, நியூசிலாந்து, ஃபிஜி, கயானா, ஹாங்காங், ஜமைக்கா, லைபீரியா, நமீபியா, சிங்கப்பூர், சுரினாம் ஆகியவை டாலரைப் பயன்படுத்துகின்றன.

ஒமானி ரியால் நாணயமே ரியால்களில் மதிப்பு மிகுந்த நாணயம். உலகின் மதிப்பு மிக்க மூன்றாவது நாணயமும் இதுவே. அரை, கால் ரியால் நோட்டுகள் ஓமானில் புழக்கத்தில் உள்ளன. ஒரு ஒமானி ரியால் சுமார் 191 . 40 இந்திய ரூபாய்க்குச் சமம். ரியால் அறிமுகமாவதற்கு முன்பு இந்திய ரூபாய் ஒமானின் சில முக்கிய நாணயங்களில் ஒன்றாக இருந்தது.

இரான்,யேமன், மொராக்கோ, கத்தார், செளதி அரேபியா போன்ற நாடுகள் ரியாலைப் பயன்படுத்துகின்றன.

நாணய மதிப்பில் பிரிட்டனின் பவுண்டுக்கு (பவுண்ட் ஸ்டெர்லிங்) ஐந்தாமிடம். ஒரு பவுண்ட் என்பது 96 . 93 இந்திய ரூபாய்க்குச் சமம்! எலிசபெத் ஃபிரை, சார்லஸ் டார்வின், ஆடம் ஸ்மித், ஜேம்ஸ்வாட், மாத்யூ போல்டன் ஆகியோரின் முகப்படங்கள் பவுண்ட்களில் இடம் பெற்று வருகின்றன.

தங்கள் முன்னாள் காலனி நாடுகளில் பவுண்டை அந்நாட்டு நாணயமாக்கியது பிரிட்டனே. பிற நாடுகளில் உள்ள பவுண்ட் பிரிட்டன் பவுண்டிலிருந்து வேறுபட்டது. நாணய மதிப்பிலும் வேறுபாடுகள் உண்டு.

ஜிப்ரால்டர் பவுண்ட் உலகின் மதிப்பு மிக்க ஆறாவது நாணயம்.

பிரிட்டனின் காலனிகளாக இருந்த ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, மானக்ஸ், ஜெர்ஸி, செயின்ட் எலோனா தீவு, போன்ற நாடுகள் பவுண்டை உபயோகப்படுத்துகின்றன.

மேலும் எகிப்து, லெபனான், தெற்கு சூடான், சிரியா, ஜிம்பாப்வே, செயின்ட் ஹெலனா, தெற்கு ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள், ஐல் ஆஃப் மேன் போன்ற நாடுகளும் பவுண்டைப் பயன்படுத்துகின்றன.

28 ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 19 நாடுகளில் மட்டுமே யூரோ
அதிகாரபூர்வமான கரன்ஸியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், போன்றவை யூரோவை தங்களது நாட்டின் அதிகாரபூர்வ நாணயமாக அங்கீகரித்துள்ளன.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பாதுகாப்பான கரன்ஸி இதுவே. ஒரு யூரோ இந்திய மதிப்பில் சுமார் 85.30 ரூபாயாகும்.

பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளே பிராங்கை தமது கரன்ஸியாக பயன்படுத்துகின்றன.

ஆனால் சுவிட்சர்லாந்து பிராங்கே நாணய மதிப்பு மிக்க பிராங்க் ஆகும். ஒரு சுவிட்சர்லாந்து பிராங்க் என்பது இந்திய ரூபாயில் 74. 28 ரூபாய்களாகும்.

பெனின், புர்கினா, பாúஸா, காமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு, காங்கோ குடியரசு, காபோன், கினியா, மாலி, நைஜர், ருவாண்டா, செனகல் போன்ற நாடுகள் பிராங்கைப் பயன்படுத்துகின்றன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader