IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை அழிப்பதற்கு முன் அடுத்த தொற்று நோய்க்கு உலக நாடுகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என உலகசுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உவகளவில் பெரிதான அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தினம் தோறும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல நாடுகள் ஊரடங்குகளை தளர்த்தி வருகின்றன. இருப்பினும் சுகாதார நடவடிக்கை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகின்றது.

இந்நிலையில் அடுத்த தொற்றுநோய் தாக்குவதற்கு முன் உலகநாடுகள் இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுசுகாதாரத்தை மேம்படுத்தும் நாடுகளில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும். கொரோனா தொற்றுதான் கடைசி வைரஸ் என்று சொல்ல முடியாது. இதுதொடர்பாக வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.

அதனால் அடுத்த தொற்றுநோய் வரும்போது சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி உலகம் தயாராக இருக்க வேண்டும். இந்த கொரோனா தொற்றுநோயை விட அடுத்த தொற்றுநோய்க்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader