IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருமண ஆசைகாட்டி 24 பெண்களுடன் உல்லாசமாக இருந்த போலி எஸ்.ஐ. கைது!!

22

இளம்பெண்களுக்கு திருமண ஆசை காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


சென்னையை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்று வீட்டு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து போலீசார் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் உடனடியாக சென்னை ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்தனர். கோர்ட் உத்தரவுபடி, எழும்பூர் போலீசார் தனிப்படை அமைத்து அந்த பெண்ணை தீவிரமாக தேடினர்.


விசாரணையில் அந்த பெண் வேலை பார்த்த நிறுவனத்தை நடத்திய ராஜேஷ் பிரித்வி (வயது 29) என்பவர் இளம்பெண்ணை கடத்திச் சென்ற தகவல் வெளியானது. இதையடுத்து அந்த பெண் இருக்கும் இடம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், இளம்பெண் மீட்கப்பட்டார். அதேநேரம் இளம்பெண்ணை கடத்திய ராஜேஷ் பிரித்வி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.


இந்நிலையில், நேற்று மதியம் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் பிரித்வி, அந்த பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இளம்பெண் செல்ல மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி உடனடியாக தனிப்படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிரித்விடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீஸ் விசாரணையின்போது ராஜேஷ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியடைய வைத்தது. அவரது வாக்குமூலத்தில், தனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் என்றும், தான் 7ம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு சென்னைக்கு வந்து ஓட்டலில் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு சமூக வலைத்தலங்களில் பெண்களுடன் பழகி திருமண ஆசை காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியது தெரிய வந்தது.

கள்ளக்காதலனை பிரிய முடியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாய்


மேலும் ராஜேஷ் பிரித்வி பெண்களை ஏமாற்றுவதற்காக தனது முகநூல் பக்கத்தில் போலீஸ் எஸ்.ஐ. ஆடையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து இளம் பெண்கள் பலர் அவருடன் பேசினர். அவர்களுடன் பேசிப் பழகி, திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தைப் பறித்துள்ளார். மேலும் திருமணத்துக்கு வலியுறுத்தும் பெண்களை, உல்லாச வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் விட்டு விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.


கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த மூன்று இளம்பெண்களுடன் கணவன்- மனைவி போல் இருந்து விட்டு பணத்தைப் பறித்து தலைமறைவாகியிருக்கிறார். கோவையில் பதுங்கியிருந்த அவரை ஆந்திர போலீசார் கைது செய்ததும், விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆந்திர போலீசாரிடம் இருந்து தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.


இதை போல பல மோசடிகளை செய்து, இது வரையில் 24 பெண்களின் வாழ்க்கையை கெடுத்ததாக ராஜேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான். மேலும் இவரிடம் இருந்து போலி ஆதார் அட்டை, போலி அடையாள அட்டை, போலி போலீஸ் சீருடை மற்றும் பான் கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை செய்கின்றனர்.


இனியாவது இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களில் யார்? எவர்? என்று தெரியாமல் பேசிப் பழகுவதை தவித்து கொள்ளுங்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#Crime #arrested #facebook #cheating #girls