பெண்கள் சேலை கட்டுவதன் பின்னணியில் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா…!

Get real time updates directly on you device, subscribe now.

சேலை கட்டும் பழக்கம் இன்றைக்கு நேற்றைக்கு உருவானதுன்னு என்று நினைத்துவிடாதீர்கள், அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாம். தென்னிந்தியாவில் தான் சேலையை பட்டு நூலில் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடையானது, அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் அசுத்தமானவை என்று பண்டைய மக்கள் கருதினர். அதனாலேயே எவ்வித தையல் வேலைபாடுகளும் இல்லாத சேலை அணிவது புனிதமாக கருதப்பட்டது.

இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்புக்கு பிறகு, இந்தியாவில் தையல் முறையில் உருவாக்கப்பட்ட ஆடைகள் பிரபலமானது. சேலைக்குள் ரவிக்கை அணியும் பழக்கமும், உள்பாவாடை அணியும் பழக்கமும் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே இந்தியா முழுக்க பிரபலமானது.

அதற்கு முன்னர் ரவிக்கை இல்லாமல் சேலை அணிவதையே பெரும்பாலான பெண்கள் விரும்பினர். இந்தியா முழுக்க பல்வேறு மொழிகள், பல்வேறு இன மக்கள் இருந்தாலும், சேலை உடுத்தும் முறை பண்பாட்டு ரீதியாக ஒன்றிணைக்கிறது.

இலங்கையிலும் தமிழ் மற்றும் சிங்கள பெண்களின் பிரதான உடை சேலை மட்டுமே. உடல் உழைப்பு மிகுந்த பெண்கள் கொசுவம் வைத்து சேலை கட்டுவதை விரும்புவதில்லை. முன்புறம் இடுப்பில் இருந்து கால் வரைக்கும், 4 முதல் 5 மடிப்புகள் வரைக்கும் தெரியும். அது முன் கொசுவம் எனப்படும்.

இடுப்பில் இருந்து, வலது புறத்தில் தொடங்கி, இடது புற தோள் மீது போட்டுக்கொள்ளும் முந்தானை மீது, 3 முதல் 4 மடிப்புகள் வரும். பெரும்பாலும் விஷேசங்களுக்கு மட்டுமே பெண்கள் இவ்வாறு சேலை அணிந்து கொள்கின்றனர். மற்ற நேரங்களில் கொசுவம் இருக்காது.

சேலை கட்டுவதில் பல முறை இருந்தாலும், இடது புறம், வலது புறம் கட்டும் முறை பிரபலமானது. உடல் உழைப்பை மட்டுமே சார்ந்து வாழும் பெண்கள், வலது கை வெளியே தெரியும் படி சேலை அணிவார்கள். மிதமான உடல் உழைப்பு மட்டுமே தேவைப்படும் பெண்களும், இல்லத்தரசிகளும், இடது கை வெளியே தெரியும் படி சேலை அணிகின்றனர்.

ஒரு காலத்தில் அடக்கத்தை மட்டுமே காட்டும் உடையாக இருந்த சேலை, நாகரிகம் என்ற பெயரில், இன்று தங்கள் அங்க அடையாளங்களை காட்டும் விதமாக சேலை கட்டும் விதம் மாற்றப்பட்டு வருகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More