IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பார்பி மோகத்தால் ரூ.55 லட்சம் வரை இழந்த பெண் !

Get real time updates directly on you device, subscribe now.


அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பார்பிடால் மீது 20 வருடங்களாக அளவுக்கு அதிகமான காதலால் அதற்காக ரூ. 55 லட்சங்கள் வரை செலவு செய்துள்ளாரம் அந்த பெண்.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பெண் அசுசா செக்கமட்டோ (வயது 34). ஜப்பானை பூர்வீகமாக கொண்ட இவர் நகத்தை அழகுபடுத்தும் தொழில் செய்து வருகிறார்.


இதில் கிடைக்கும் வருமானத்தை முழுவதும் பார்பிடால் பொம்மை வாங்குவதிலும் , அதுசம்பந்தமான பொருட்கள் சேமிப்பதிலுமே செலவு செய்து வருகிறார்.


தனது 15வயதில் தொடங்கிய இந்த ஆசை நாளடைவில் அதிகமாக , அது காதலாக மாறியது தான் ஆச்சரியத்திற்குரியது. இவரது வீட்டில் சுமார் 60 பார்பி பைகள் , 145 பார்பி பொம்மைகள் , 40 ஜோடி பார்பி ஷுக்கள் என வீட்டில் எந்தப்பக்கம் திரும்பி பார்த்தாலும் பார்பி பொம்மைகள் கண்ணில் தென்படுகின்றன.


பார்பி பொம்மையின் மீது உள்ள காதலால் இவர் தன்னுடைய உருவத்தை பார்பி பொம்மை போல் மாற்றிவிடுவார் என பலரும் கருதினர். ஆனால் அசுசாவோ தலையை பிங்க் நிறத்தில் கலர் செய்து கொண்டும் தன்னுடைய பெயரை அசுசோபார்பி எனவும் மாற்றி கொண்டார்.


பார்பி சம்பந்தமான பொருட்கள் மீது தான் தனக்கு காதலே தவிர பார்பியின் உருவத்தில் இல்லை என தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார் அசுசா.


அசுசா இதுவரை 80000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 55லட்சம் ரூபாய்க்கும் மேல்) பணத்தை பார்பி சம்பந்தமான பொருட்களை சேகரிப்பதற்காகவே செலவளித்துள்ளேன் என்றார். பற்றாக்குறைக்கு தனது வீட்டையும் பார்பி போல மாற்றியுள்ளார். இவர் உபயோகப்படுத்தும் பெட்சீட் , கார் , டவல் , டம்பளர் , பெயிண்ட் என எதிலும் பார்பிதான்.


15 வயதில் ஏற்பட்ட பார்பி மீதான மோகம் 34 வயதாகியும் ஆசை கூடுகிறதே தவிர குறைந்தபாடு இல்லை என்கிறார் இந்த பார்பி கேர்ள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader