IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மர்ம முறையில் பெண் என்ஜினீயர் சாவு! போலீஸ் தீவிர விசாரணை!!

Get real time updates directly on you device, subscribe now.


பெண் என்ஜினீயர் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இவருடைய கொலை குறித்து பலகோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


கர்நாடக அரக்கல் கோடு டவுன் பகுதியை சேர்ந்தவர் பவிதா (வயது 23). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக  ஹோட்டலில் தங்கி இருந்தார்.



இந்நிலையில் நேற்று  காலையில் ஓட்டலின் பின்புறத்தில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். பவிதா உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தது. அவருடைய கையில் புனித் என பச்சை குத்தி இருந்தார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் மர்மக் கொலைகள்

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. பவிதா கையில் பச்சை குத்தி இருப்பது யாருடைய பெயராக இருக்கும்? இவர் ஏன் கொலை செய்யபட்டார்? சொந்த வீடு இருக்கும் போது ஹோட்டலில் பவிதா தங்க வேண்டிய அவசியம் என்ன? பவிதாவுடன் வேறு யாரும் தங்கி இருந்தார்களா என பல சந்தேகங்களுடனும் பல கோணங்களிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#murder #women #engineer #hotel

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader