IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

படமெடுத்து ஆடிய பாம்பை கண்டு சாமி ஆடிய பக்தை

116


கடலூர் மாவட்டம் தேவதானம்பட்டி பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி. இன்று காலை அவரது வீட்டிற்கு அருகே சுமார் 6 அடி நீள நல்லபாம்பு ஒன்று வந்துள்ளது.

இதனால் அக்கம் பக்கத்தினர் பதற்றமடைந்து அருகிலுள்ள பாம்பு பிடிப்பவருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் பாம்பை தேடினர். ஆனால் பாம்பு எளிதில் அகபடவில்லை. பின்பு வீட்டின் மேற்கூரையில் இருந்த பாம்பு படமெடுத்து ஆடத் தொடங்கியது. இதனால் மேலும் அங்கிருந்த மக்கள் பதற்றமான சூழ்நிலை தோன்றியது.

Related Posts
1 of 1,231

பாம்பு ஒருபக்கம் படமெடுத்து ஆட, வீட்டின் உரிமையாளர் சரஸ்வதி சாமிதான் பாம்பு உருவில் நமது வீட்டிற்கு வந்துள்ளது என பரவசமாகி அவரும் சாமி ஆட ஆரம்பித்தார். அதோடு விடாமல் பாம்பை யாரும் பிடிக்கக்கூடாது, அது பாம்பு இல்லை சாமி எனவும் கூறினார்.

இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாம்பு படமெடுப்பதை நிறுத்திக் கொண்டது. அதனால் வீட்டின் உரிமையாளர் சரஸ்வதி சோர்வடைந்து கீழே அமர இது சரியான நேரம் என கருதி பாம்பு பிடிப்பவர்கள் டக்கென பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

வீடு தேடி வந்த பாம்பை கண்ட வீட்டின் உரிமையாளரும் சாமி ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.