IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்ததால் பெண் மரணம்

44

விருத்தாசலத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக உபகரணத்தை வைத்து தைத்ததால் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கலாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி பிரியா (24). கர்ப்பிணியான இவரை கடந்த டிச. 27-ந் தேதி பிரசவத்துக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அன்று இரவே அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

இருப்பினும் பிரியாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்தாக தெரிகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்துள்ளார்.

Related Posts
1 of 2

இதற்கிடையே இறந்த பிரியாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த உபகரணத்தை மருத்துவர்கள் கவனக்குறைவாக உள்ளே வைத்து தைத்ததால் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாகவே அவர் உயிரிழந்ததாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாம்.

இதையடுத்து பிரியாவின் உறவினர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிக்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.