IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அங்க என்னமா சத்தம்..? சும்மா சிங்கத்துக்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..சார்

624


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் விலங்கியல் பூங்காவில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று உள்ளது.


இந்த சிங்கத்தை பார்க்கவே தினந்தோறும் மக்கள் அதிகமாக வந்து செல்வார்கள். அப்படி பார்வையாளராக வந்தவர்களில் ஒரு பெண் தவறுதலாக பூங்காவிற்குள் உள்ளே குதித்துவிட்டார். அந்நேரம் பார்த்து சிங்கம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த பெண் சிங்கத்தின் முன்பு போய் நின்றுள்ளார்.


சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. சிங்கம் அப்போதுதான் புல்லாக சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் மெதுவாக நடந்து கொண்டுவந்தது. எதுக்காக இந்த பொண்ணு நம்ம முன்னாடி வந்து நிக்கிறாள் என்று புரியாமல் சிங்கமும் அமைதியாக நின்றன. ஆனால் அந்த பொண்ணு சிங்கத்திற்கு முன்னாடி நின்று கொண்டு ஏதோ சத்தம் போட்டு கொண்டிருந்தார்.


சிங்கத்துக்கு எதுவும் புரியல. அந்த பெண்ணின் முன்னாடி அமைதியாக சிங்கம் நின்று கொண்டிருந்தது. அந்த பெண்ணின் சத்தம் ஓவராக இருந்ததால் அந்த பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லையோ என்பதைப் போல சிங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.


இதற்கிடையே சிங்கத்தை சீண்டிக் கொண்டிருக்கும் பெண்ணின் தகவல் கிடைத்த விலங்கியல் காப்பாளர்கள் விரைந்து வந்தனர். பின்பு சிங்கத்தின் முன்பு நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டனர். இருப்பினும் அந்தபெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.