12.1 C
Munich
Monday, October 3, 2022

400 ஆண்டுகளுக்கு பின் வாயு கோள்களின் இணைவுடன் ஓர் நீண்ட இரவு – வானில் நிகழும் அதிசயம்

Must read

2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இந்த பூவுலகில் பல்வேறு எதிர்பாரா நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றுள் பலவும் மகிழ்ச்சியானவை அல்ல என்பதே நிதர்சனம்;

காரணம் யாவரும் அறிந்த கோவிட்-19 என்ற சமூகபரவல் நோய் தொற்றினால் பூமியில் மனிதகுலமே பாதிப்படைந்தது என்பதே …

ஆனால் வானமும் , சூர்ய குடும்ப கோள்களும் தங்கள் இயக்கங்களில் யாதொரு மாற்றமும் இல்லாமல் பல அரிய மாற்று கண்கவர் மாயஜாலங்களை இந்த 2020 ஆம் ஆண்டில் நிகழ்த்திக் காட்டின.

அதுபோல இன்று டிசம்பர் 21ம் தேதி (2020) இரவு வானில் அரிய நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றோடு ஒன்று இணைவது போன்று நேர்க்கோட்டில் தோன்ற உள்ளது.

இதனை வெறும் கண்களால் காணலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரிய நிகழ்வின் போது எது வியாழன், எது சனி கோள் என அறிவது மிக கடினமாக இருக்கும்… ஏனென்றால் இவ்விரு கோள்களுக்குள் இடையேயான கோண வேறுபாடு 0.1 டிகிரியாக அமையும்.

இன்றைய தினம் வானில் ஏற்படும் இவ்விரு கோள்களின் இணைவை பூமியில் இருந்து பார்க்கும் பொழுது முழுநிலவின் ஐந்தில் ஒரு பங்கு போல மிக பெரியதாக காட்சியளிக்கும்.

ஒவ்வொரு 19 வருடங்களுக்கு ஒருமுறை இவ்விரு கோள்கள் மிக அருகில் நெருங்கி வருவது போன்று பூமியிலிருந்து தெரியும்.

[bsa_pro_ma_space id=”146″ type=”space” url=”https://spreadmax.com/api/” secure=”ab45f85972653b9387f45d957db91c5b4120e8a9″]

ஆனால் இன்று முன்பைகாட்டிலும் மிக மிக குறைவான கோண விகிதத்தில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போன்று காட்சியளிக்கும்.

இவ்விரு பெரிய கோள்களும் கடந்த 1623ம் ஆண்டு ஜுலை 16க்கு பின்பு இன்றுதான் மிக மிக அருகில் தோன்றுகிறது.

பல வருடங்களுக்கு பின்பு நடைபெறும் இந்த அரிய காட்சியானது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் மத்தியில் அதீத ஆர்வத்தை தூண்டுகிறது.

மேலும் இவ்விரு வாயு கோள்கள் இதுபோன்று ஒரே நேர்க்கோட்டில் வருவதை காண நாம் 2080 மார்ச் 15ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

இன்று இவ்விரு கோள்கள் ஒன்றோடு ஒன்று நேர்க் கோட்டில் இருப்பது போல் தோன்றினாலும், அவ்விரு கிரகங்களுக்கு இடைப்பட்ட தூரம் 735 மில்லியன் கி.மீ தூரமாகும்.

https://twitter.com/Sofa21898604/status/1340907562439471106

டிசம்பர் 21, 2020 இரவு 11.50 மணிக்கு உச்சகட்ட கோள்களின் இணைவு நடைபெறும், என்றாலும் டிசம்பர் 10ம் தேதி முதல் வானில் இந்த அதிசயத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பின் மேற்கு வானில் நாம் காணலாம்.

மேலும் டிசம்பர் 21, 2020 நாளை பூமியின் வட கோளத்தில் மிக நீண்ட இரவைக் கொண்ட நாளாகவும், பூமியின் தெற்கு கோளத்தில் மிக நீண்ட பகலைக் கொண்ட நாளாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் நீண்ட இரவின் நேரங்கள் பின்வருமாறு,

1.கொல்கத்தா – 13 மணிநேரம், 15 நிமிடம்
2. டெல்லி – 13 மணிநேரம், 41 நிமிடம்
3. மும்பை – 13 மணிநேரம், 01 நிமிடம்
4. சென்னை – 12 மணிநேரம், 39 நிமிடம்
5. பெங்களூர் – 12 மணிநேரம், 39 நிமிடம்

இதுபோல் பூமியின் தெற்கு கோளத்தில் மிக நீண்ட பகலை கொண்ட நகரங்களாக ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் 14 மணிநேரம், 47 நிமிடங்கள் மற்றும் நியூசிலாந்தில் 15 மணிநேரம், 48 நிமிடங்கள் கொண்ட நகரங்களாக விளங்கும்.

இந்த அரிய வானியல் நிகழ்வை இன்று மறவாமல் கண்டுகளித்து 2020ம் ஆண்டிற்கு விடையளிப்போம்.

[bsa_pro_ma_space id=”146″ type=”space” url=”https://spreadmax.com/api/” secure=”ab45f85972653b9387f45d957db91c5b4120e8a9″]

  • க. ஜெயப்பிரகாஷ்
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article