IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பனிக்கால சரும பராமரிப்பு

152

பனிகாலம் வந்து விட்டாலே நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த பருவ காலத்தில் வெயிலும் குளிரும் மாறிமாறி வருவதால் நமது உடலில் வறட்சி உண்டாகிறது. இதனால் முகம் வறட்சியடைந்து போகிறது. இதனால் வெடிப்புகளும் பிளவுகளும் உண்டாகின்றன. சருமத்தை பராமரிக்க சில வழிகள்

தினமும் இரவில் தூங்க செல்லும் முன் தேங்காய் எண்ணெய் கொண்டு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். குளிக்கும் முன் எண்ணெய் தேய்த்து குளித்தால் குளித்தப் பின் தோலில் ஏற்படும் வறட்சி மற்றும் சுருக்கங்கள் தடுக்கப்படும். குளிர்காலத்தில் வழக்கத்தை விட சற்று அதிக நேரம் தூங்க வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரித்து உங்களது முகம் பொலிவாக தோன்றும்.

வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடிப்பது, வெதுவெதுப்பான சாப்பாட்டை சாப்பிடுவது போன்றவை மிகச்சிறந்ததாக இருக்கும். உடலுக்கு சூடு தரக்கூடிய உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கோதுமை, பாதாம், வேர்க்கடலை, பிராக்கோலி, கரட், பசளைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் சோப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு ரெடிமேட் ஆரஞ்சு பழத் தோல் பொடியை வாங்கிக் கலந்து குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும். உதடுகளைப் பராமரிக்க வெண்ணெய் அல்லது வாசிலின் பூசி வரலாம். காலில் ஏற்படும் வெடிப்புகளுக்கு இரவு தூங்கப் போகும் முன் பாதங்களை சுடுநீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய் அல்லது வாசிலின் பூசி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் கால்களுக்கு சாக்ஸ் அணிந்து தூங்க வேண்டும். இதனால், பித்த வெடிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். அதிகப்படியான வறட்சியைக் கொண்டி ருப்பவர்கள் இரவு நேரங்களில் படுக்க செல்வதற்கு முன்பு வறட்சியான சருமத்தில் ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்து வரவும். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து முகத்தை சோர்விலிருந்து மீட்கும். இவ்வாறு செய்தால் பனி காலத்தை சமாளிக்கலாம்.

#Winter #Skin #Care