குளிர்கால சரும பராமரிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

குளிர்காலத்தில் வழக்கத்தை விட சரும பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வான முகம், வறண்ட உதடுகள், உலர்ந்த சருமம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தண்ணீர் குறைவாக பருகுவதே அதற்கு முக்கிய காரணம். அது சருமத்தின் உள்புறமும், வெளிப்புறமும் உலர்தன்மை அடைவதற்கு வழிவகுத்துவிடும்.

சருமத்தின் அழகைப் பாதுகாக்க வருடம் முழுவதும் செய்ய வேண்டிய ஒரு செயல் தான் கிளின்சிங். ஆனால் இதனை தவறாமல் குளிர்காலங்களில் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நாளைக்கு 2-3 முறை, காட்டனை பாலில் நனைத்து, அதனைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளிவருவதுடன், சருமத்தில் ஈரப்பசையானது தக்க வைக்கப்படும்.

தோல் வறண்டு போகுதல் மற்றும் தோல் வெடிப்பதை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணையை உடலில் தேய்க்கலாம். குளித்து முடித்தவுடன் மாய்ச்சரைசர்கள், கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

அவகேடோவில் ஈரப்பசையை தக்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனை மசித்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்தல், வறட்டு சருமம் சருமம் சரியாகும். குளிருக்கும் இதமாக இருப்பதுடன் எண்ணெய் வாசனையும் அடிக்காது.

#Winter #season #skin #care

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More