IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது

29


பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போர் தாக்குதலில் போர் கமாண்டர் அபிநந்தன் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை கவுரவிக்கும் வகையில் வீர்சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது.


இந்தியாவின் 73 சுதந்திர தினத்தை நாடுமுழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.


இந்தியாவிற்கு எதிராக, பாகிஸ்தான் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து , பிப்., 27ல் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின், எப் 17 ரக போர் விமானங்கள் புகுந்தன. அவற்றை நம் இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.


பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய நம் விமானப்படை, விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிக்கும் போது எதிர்பாராவிதமாக பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் விழுந்து மாட்டிக் கொண்டார்.


பின்பு இந்தியாவின் நெருக்கடியை தொடர்ந்து அபிநந்தனை கைது செய்த இரண்டே நாளில் பாகிஸ்தான் விடுவித்தது. இந்நிலையில் அபிநந்தனை கவுரமிக்கும் நிலையில், இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.