IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இங்கிலாந்து நிதானமான துடுப்பாட்டம்.!!!!

16

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், 3வதும் மற்றம் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.

 

செயின்ட் லூசியாவில் ஆரம்பமானடெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

 

இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பத்த இங்கிலாந்து அணி நிதானமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது.

 

அத்துடன் இன்றயை முதலாம் நாள் ஆட்ட நிறைவில், இங்கிலாந்து அணி, 4 விக்கட்டுக்களை இழந்து, 231 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 

துடுப்பாட்டத்தில், ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களுடனும், மற்றும் பென் ஸ்டொக்ஸ் 62 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை தொடரையும் கைப்பற்றியுள்ளது.