IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு! லாக் டவுன் தொடர்கிறதா…?

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் கொரேனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இடங்களில் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 7 தினங்களே உள்ளதால் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க இருக்கிறார்.

இந்தியாவில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே 17ம் தேதிக்கு பின் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று தகவல் வெளியானது. ஆனால் ஒருசில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

எனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என நாளை நடைபெறும் ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஒருவேளை ஊரடங்கை நீட்டிக்கவில்லை எனில் கட்டுப்பாடுகளை படிப்படியாக எப்படி கொஞ்சமாக தளர்த்துவது நீக்குவது என்பது குறித்து பிறகு ஆலோசிக்க உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader