IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..?

Get real time updates directly on you device, subscribe now.

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக புதிய இயங்குதளப் பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இப் பதிப்பில் தரப்படவுள்ள சில புதிய அம்சங்கள் தொடர்பாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவற்றில் பயனர்கள் டிராக் செய்யும் வசதியை தடுக்கக்கூடிய விசேட வசதியும் தரப்பட்டுள்ளது. அதாவது முன்னணி இணைய நிறுவனங்கள் பயனர்கள் தமது இணையத்தளத்தினைப் பயன்படுத்தும்போது அவர்களை ரகசியமாக டிராக் செய்கின்றனர்.

அதேபோன்று அவர்கள் நகல் (Copy) செய்யும் விஷயங்களையும் Clipboard மூலமாக கண்காணிக்கின்றனர். இதன் காரணமாக பயனர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்கின்றது.

இந்த வசதியினைப் பயன்படுத்தி டிராக் செய்வதை நிறுத்திவைக்க முடியும். பேஸ்புக் நிறுவனமும் தனது விளம்பர உத்திகள் உட்பட மேலும் சில தேவைகளுக்காக இவ்வாறு பயனர்களை டிராக் செய்கின்றது. எனவே ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியானது பேஸ்புக் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகின்றது.

Genuine Indian Payment Gateway

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader