10.1 C
Munich
Monday, October 3, 2022

மிகவும் ஆபத்தான லிங்க்ஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்

Must read

பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் நாம் பார்க்க முடியாத மற்றும் கேள்விப்படாத வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் லிங்க்ஸ் எனப்படும் வனவிலங்கு.

பார்ப்பதற்கு சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் பூனை இவை அனைத்தையும் கலந்த மாதிரியான ஒருவகை விலங்கு தான் லிங்க்ஸ். இது நான்கு வகைகளில் காணப்படுகின்றன.

கனடா லிங்க்ஸ், சைபீரியன், யுரேசியன் மற்றும் பாப்கட் என நான்கு வகைகளில் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் மிகவும் ஆபத்தானவை.

பொதுவாக பனி படர்ந்த இடங்கள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே லிங்க்ஸ் வசிக்கும்.

இது நன்றாக வளர்ந்தவை 50 இன்ச் வரை காணப்படும். அதன் எடை 20 கிலோ வரை காணப்படும்.


உடல் முழுவதும் முடிகள் நிறைந்து பொசு பொசுவென காணப்பட்டாலும் வால் பகுதி வெறும் 4 இன்ச் மட்டும் தான் இருக்கும்.

எவ்வளவு செங்குத்தான மலைப்பகுதியாக இருந்தாலும் ஈஸியாகவும் ஏறிவிடும். தண்ணீரில் வேகமாக நீந்தவும் செய்யும்.

பார்ப்பதற்கு புலி சிங்கம் போன்று காணப்பட்டாலும் மிகவும் சைலண்டாக விலங்குகளை வேட்டையாடும்.

சின்னச்சின்ன எலிகள், பறவைகள் மற்றும் முயல்கள் எவ்வளவு ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளே ஒழிந்து கொண்டாலும் அசால்ட்டாக லிங்க்ஸ் வேட்டையாடி விடும்.


அதேப்போன்று யுரேசியன் லிங்க்ஸ் தன்னைவிட பெரிய அளவு மானையே வேட்டையாடிவிடும். வேட்டையாடும் விதமே வித்தியாசமாக இருக்கும்.

பெரிய காதுகள் மற்றும் அதற்கு கீழே வித்தியாசமான முடிகள், பெரிய பாதங்கள் இருப்பதால் தன்னோட இரையின் சத்தம் எவ்வளவு தூரத்திலோ அல்லது எவ்வளவு ஆழத்திலோ இருந்தாலும் சத்தம் போடாமல் போய் அந்த இரையை பிடித்துவிடும்.

யுரேசியன் லிங்க்ஸ் பார்ப்பதற்கு பொசு பொசுவென நிறைய முடிகளுடன் பெரிய சைஸ் பூனை போன்று அழகாக காணப்படும்.


அதனாலேயே 19ம் நூற்றாண்டில் கம்பளி தேவைக்காகவே இதனை அதிக அளவில் வேட்டையாடி உள்ளனர்.

இந்த லிங்க்ஸ் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த காலகட்டத்தில் மலைப்பாங்கான பனிகாடுகளில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்துள்ளன.

பொதுவாக லிங்க்ஸ் தனியாக வேட்டையாடி சுற்றினாலும் இனப்பெருக்க காலத்தில் பெண் லிங்க்ஸை கவர்வதற்காகவே கூட்டமாக போய் ஆண் லிங்க்ஸ் தன்னோட திறமையை காண்பிக்கும்.

லிங்க்ஸ் பொதுவாக குளிர்காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். 70 நாட்கள் கர்ப்பமாக இருக்கும் பெண் லிங்க்ஸ், 2 முதல் 6 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும்.

 

அந்த குட்டிகளை பெண் லிங்க்ஸ்கள் மட்டுமே பராமரிக்கும்.

இந்த லிங்க்ஸ் இனம் அதிகளவில் அழிந்து வருவதாக உலகளவில் முதன்முறையாக குரல் கொடுத்தது ஸ்பெயின் நாட்டினர்கள் தான்.

2004ல் தெற்கு ஸ்பெயினில் வெறும் 100 லிங்க்ஸ் மட்டும் தான் இருக்கிறது என அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.

2015ல் வன உயிரினங்களுக்கான சர்வதேச யூனியன் ஒரு விதிமுறையை அறிவித்தனர்.

இந்த லிங்க்ஸ் இனம் மிகவும் அபூர்வமானது, அதனை யாரும் வேட்டையாட கூடாது. மாறாக அதனை பாதுகாக்க வேண்டும் என்றனர்.


அதன்பிறகு தான் வேட்டையாடுவதை நிறுத்தினர். அதன்பிறகு தான் லிங்க்ஸை பாதுகாக்க பலநாடுகள் முன்வந்தன.

தற்போது லிங்க்ஸை பல நாடுகளில் பூனைகளுக்கு பதிலாக வீட்டில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

வனவிலங்கான லிங்க்ஸ் மிகவும் ஆபத்தானவை என தெரிந்தும் பல மக்கள் இதனை வீட்டில் வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article