IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனைவியை கொன்று கிணற்றில் வீசி நாடகமாடிய கணவர்: 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

Get real time updates directly on you device, subscribe now.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆள் வைத்து கொன்று விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி, 3 ஆண்டுகளாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்தவர் ரமேஷ்;. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2005ல்; திருமணமானது. இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017ம்; ஆண்டு சரண்யா திடீரென மாயமாகி உள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இது பற்றி சரண்யாவின் பெற்றோர் ஆலங்குடி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து, சரண்யாவின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசாருக்கு இவ்வழக்கு கைமாறியது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் ரமேசை அழைத்து விசாரித்த போது, சரண்யா கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் மனைவி சரண்யாவின் நடத்தையில் ரமேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனால் தனது நண்பர்களான ரகு, பாட்சா உள்ளிட்ட நான்கு பேரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து சரண்யாவை கொலை செய்ய சொன்னத்துடன், கொலையான சரண்யாவின் உடலை சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸார், சரண்யாவின் உடலை எலும்புக்கூடாக சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின் தோண்டி எடுத்தனர். பின்னர் அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மனைவியை கொலை செய்து விட்டு, 3 ஆண்டுகளாக நாடகமாடிய ரமேஷ்; மற்றும் கொலையாளிள் பாட்சா மற்றும் ரகு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்..

மனைவியை கணவரே ஆள் வைத்து கொன்று விட்டு மூன்று வருடம் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#wife #Well #murder #husdend #arrested

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader