IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சொத்துக்காக இப்படியுமா செய்வாள் மனைவி? கணவனையே எரித்துக் கொன்ற கொடூரம்!!

17

சொத்துகாக கணவரையே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:


நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 68). வெளிநாட்டில் தையல் தொழிலாளியாக வேலை செய்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இங்கு வந்ததும் தனியார் வங்கி ஒன்றில் இரவு நேர காவலராக வேலை பார்த்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மனைவி மரியலீலா (வயது 62). இவர்களுக்கு சபரி ஆனந்த் (வயது 40), டிக்டோ விக்டர் (வயது 35) என்ற இரு மகன்களும், அன்ன ஜூலியட் (வயது 43), ஞான செல்வி பிரகாசி (வயது 38) என்ற இரு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

மனைவியை உயிரோடு கொளுத்தினேன்

பாக்கிய ராஜூக்கும், மரிய லீலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலைபார்த்து சம்பாதித்த பணத்தில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் சபரி ஆனந்த் மாடியிலும், டிக்டோ விக்டரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மரிய லீலா அந்த வீட்டின் பின்புறம் தனியாக வசித்து வருகிறார். பாக்கியராஜ் வீட்டின் முன்புறம் தனியாக வசித்து வந்தார். உடல் நல குறைவின் காரணமாக பாக்கியராஜ் டிக்டோ விக்டர் வீட்டில் சாப்பிட்டு வந்தார்.


இந்நிலையில் பாக்கியராஜ் தனது சொத்துகளை மகன்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் மனைவி மரியலீலா தனது பெயரில் சொத்தை மாற்றி வைக்குமாறு சண்டை போட்டுள்ளார். ஆனால் பாக்கியராஜ் அதனை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் மரிய லீலா ஆத்திரமடைந்துள்ளார்.


இதனால் சம்பவத்தன்று பாக்கியராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மரியலீலா அவர் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். எரிச்சல் தாங்க முடியாமல் பாக்கியராஜ் அலறித் துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்து மகன்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் இருந்த பாக்கியராஜை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.


இந்த சம்பவம் குறித்து வள்ளீயூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மரிய லீலாவை கைது செய்து விசாரணை செய்து வருகிறனர்.
#wife #crime #kills #husband