IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார மையம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 50 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 20 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவினால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மற்ற நாடுகளை விட கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை மேலாதிக நாடுகள் ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், ஏழை நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader