IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

யார் மாஸ்க் அணிய வேண்டும்? உலக சுகாதார அமைப்பு விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகளவில் கொரோனா பாதிப்பு 6.7 மில்லியனைத் தாண்டிய நிலையில் கோவிட்-19 பரவலைக் கட்டுபடுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தனது முகக்கவசம் பயன்பாடு வழிகாட்டுதல்களை மாற்றியமைத்தது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,” கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்தது. மேலும்,சர்வதேச வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டது. அதன், அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தனது வழிகாட்டலை புதிப்பித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “ 5-வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக்கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது.

அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும். 12-வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader