IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோதுமை பால் அல்வா

428


தேவையான பொருட்கள் :


சம்பா கோதுமை – 250கிராம், சர்க்கரை – 1கிலோ, நெய் – 350கிராம், ஏலக்காய், முந்திரி – சிறிதளவு, கேசரிப் பவுடர் – தேவைக்கேற்ப, பால் – 1டீஸ்பூன், எழுமிச்சைச் சாறு – விரும்பினால்.


இப்படித்தான் செய்யணும் :

  • சம்பா கோதுமை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.

  • அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை கம்பிப் பதமாகப் பாகு வைக்கவும்.

  • பாகில் ஒரு டீஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.

  • இப்போது கோதுமைப் பாலின் தெளிவை இறுத்துவிட்டு கெட்டிப் பாலை மட்டும் பாகில் விடவும்.

  • அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, கேசரிப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.

  • இப்போது சில துளிகள் எழுமிச்சைச் சாறு சேர்த்தால் அல்வா அடிப்பிடிக்காமல் வேகமாகப் பந்து மாதிரி கிளம்பி சீக்கிரம் கெட்டியான பதத்திற்கு வரும்.

  • கலவை கொதித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.

  • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும் போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

  • சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக்கவும்.

  • ஆறாவது கப் வெந்நீரும், மிச்சமிருக்கும் நெய்யையும் சேர்த்த பின் வருவதே சரியான பதம்.

  • கிளறிக் கொண்டே இருந்தால் வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும் போது ஏபப்பொடி சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.


#Wheat #milk #Alva