வாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

வாட்ஸ்ஆப் சாட்டில் எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு சாட்டை எட்டு மணிநேரம் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் வரை மியூட் செய்யலாம் என்று இருந்தது. ஆனால் தற்போது ios மற்றும் Android சாதனங்களுக்கான வாட்ஸ்ஆப் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி பயனர்கள் இனி எப்போதும் மியூட் செய்துகொள்வதற்கான வசதியை வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது. இந்த புதிய அம்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ios மற்றும் Android Beta பயன்பாட்டில் சோதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் chat-ஐ மியூட் செய்வதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக எப்போதும் (Always) என்ற option-ஐ கொடுத்துள்ளது.

ஒருவேளை யாருக்கேனும் புதிய அப்டேட் காட்டவில்லை என்றால் அவர்களின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வாட்ஸ் ஆப்பில் போட்டோ, gif ஃபைல், லிங்க்ஸ், வீடியோஸ், கோப்புகள், ஆடியோ ஆகியவற்றை தேடி கண்டுபிடிக்கும் வகையில் search option சேர்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#whatsappupdate #whatsappfeatures #

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More