பயனர்களை உற்சாகமூட்டும் வாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!

Get real time updates directly on you device, subscribe now.

வாட்ஸ்ஆப் செயலியில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதுகுறித்த முழுமையான தகவல்களை இங்கு காண்போம்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் குறுஞ்செய்தி அனுப்பவும் வீடியோ கால் பயன்படுத்தவும் உள்ள பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது பயனர்களை கவரும் விதம் புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது வாட்ஸ்ஆப் தனது பீட்டா செயலியில் 2.20.203.3 அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.

வெளியான புதிய அப்டேட்டில் மிஸ்டு கால்கள் மூலம் இணைவது, பேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்சமயம் க்ரூப் கால்களை ஏற்கவில்லை எனில், கால் செய்தவர் முயற்சிக்காமல் பயனர்களால் அதில் இணைய முடியாது.

தற்சமயம் இந்த வசதியை மிஸ்டு கால்கள் மூலம் இணைந்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த வசதி க்ரூப் கால் நிறைவுறும் வரையில் செயல்படும். மேலும் இதனை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்தாலே போதுமானது. பின் திரையில் அழைப்பில் இணைந்து கொள்ள கோரும் ஆப்ஷன் தோன்றும்.

இத்துடன் செயலியின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் கைரேகை வசதியுடன் பேஸ் அன்லாக் வசதியும் வாட்ஸ்ஆப்பில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் பேஸ் அன்லாக் வசதி அதிக பிரபலமாகி வருவதை அடுத்து வாட்ஸ்அப் இதனை தனது செயலியில் சேர்ப்பதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது.

#whatsappupdate #whatsapp beta version #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More