வாட்ஸ்அப்ல டெய்லி ஸ்டேட்டஸ் போடுறீங்களா? அப்ப உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!!
வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் பயன்படுத்தும் ஸ்டேட்டஸ் தன்மையை கொண்டு ஒருவரின் குணாதிசியங்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
நாகரீக உலகில் தவிர்க்க முடியாத ஒன்று தொலைத் தொடர்பு. ஆனால் இன்று அந்த தொலை தொடர்பு சாதனங்களை சுற்றியே உலகம் சுற்ற ஆரம்பித்து விட்டது. இன்று செல்போனின் அபார வளர்ச்சி அனைத்துதர மக்களையும் போட்டி போட்டு கற்றுக் கொள்ள வைத்துள்ளது. அந்தளவிற்கு செல்போனின் வளர்ச்சியும், மக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
முன்னொரு காலங்களில் ஒரு செய்தியோ அல்லது தகவலையோ தெரிவிப்பதற்காக தொலைபேசியை பயன்படுத்தினோம். பின்பு வெளிநாடு மற்றும் வெளியூரில் வாழ்பவர்களை நேரில் சந்தித்து பேசுவதைப் போல வீடியோ காலிங் மூலம் நமது அன்பை வெளிப்படுத்தினோம்.
இப்போது அந்த வெளிப்படைத் தன்மையும் குறைந்து தனக்குள்ளே சந்தோசம், காதல், நட்பு, பாசம், கோபம், தனிமை போன்ற எண்ணற்ற குணங்களை தனக்குள்ளே வெளிப்படுத்த தயாராகிவிட்டோம். ஆம் செல்போன் வளர்ச்சியால் வாட்ஸ்ஆப் பயன்பாட்டால் தனிப்பட்ட கருத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களாக வைத்து நமது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறோம்.
ஒருவருடைய மனநிலையை அறிய அவருடைய மொபைல்போனில் வைத்திருக்கும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பயன்படுத்தும் புகைப்படமோ அல்லது வீடியோக்களே சொல்லிவிடும் அவர் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்று. அந்த அளவிற்கு நாம் வாட்ஸ்ஆப்பில் மூழ்கிவிட்டோம்.

காதல் :
அறிமுக காதலோ அல்லது அனுபவ காதலோ இவருடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் எப்போதும் காதல் படங்கள் மற்றும் காதலை வெளிப்படுத்தும் பாடல்களாகத்தான் வைத்திருப்பர்.
பாசம்
நண்பனோட பாசமோ அல்லது குடும்ப உறவினர்களை நினைத்தோ மகன், மகள் தந்தை பாசத்தை நினைவூட்டும் வீடியோ மற்றும் படங்களையே அதிகம் பயன்படுத்துவர்.

சோகம்
இந்தமாதிரி மனிதர்கள் எப்போதும் எதையோ இழந்துவிட்டது போல் சோகத்துடன் காண்பார்கள். எல்லா விஷயத்திலும் விரக்தியாக சோகத்துடனே காட்சியளிப்பர். அதனால் அவருடைய வாட்ஸ்ஆப் டிபி மற்றும் ஸ்டேட்டஸிலும் சோக கீதங்களே அதிகம் வாசிக்கும்.
உற்சாகம்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி போராடும் குணங்கள் அதிகமாக இவர்களிடம் காணப்படும். காலை பொழுது விடிந்தவுடன் உற்சாகவும், சிறப்பான விடியலை தனக்காகவே ஏற்படுத்தி கொடுத்ததுபோல் இவர்கள் போடும் மெசெஜ் மற்றும் படங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

சுற்றுலா
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவில், திருவிழா அல்லது கொடைக்கானல் போன்ற சுற்றுலாப்பகுதிகளுக்கு சென்றுவிட்டால் உடனே செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் பகுதிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களை இனி பேஸ்புக்கிலும் பார்க்கலாம்
கொடைக்கானல் கிளம்பிவிட்டேன் என்பதிலிருந்து, Onthe way, near by Kodaikanal , Reach Kodaikanal, On kodaikanal என்று வீட்டிலிருந்து கிளம்பியது முதல் மீண்டும் வீடு திரும்பும்வரை புகைப்படங்களை எடுத்து வாட்ஸ்ஆப்பை நிரப்பி விடுவார்கள். இதில் சிலர் மேலும் சுற்றுலா சென்று வந்த பிறகு போட்டோக்களை அப்டேட் செய்பவர்களும் இருக்கின்றனர்.
வாட்ஸ்ஆப் புரோபைல் பிக்சரில் மேலும் சிலர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தனக்கு விருப்பமான அல்லது தன்னை சந்தோசமாக வெளிப்படுத்திக் கொள்ளும் விதமான புகைப்படங்களையே அனைவரும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அதில் ஒருசில நபர்கள் தான் சோகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வாட்ஸ்ஆப் புரோபைல் படங்களை டெலிட் செய்துவிட்டு டிபி பிக்சர் இல்லாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு ஒருவரின் செயல்பாடுகளை கவனிக்க தொடங்கிவிட்டால் அது கடைசியில் ஆபத்தில் தான் முடிவடையும்.
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் நாம் பயன்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மூன்றாவது நபர் ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் மனதில் நினைவு கொள்ள வேண்டும். ஆகவே நமது அன்பை அருகில் இருப்பவரிடம் காண்பித்து வருங்கால தலைமுறையினருக்கு அன்பை எடுத்துரைப்போம்.
#WhatsappStatus #DP #Story #In4Net