IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களை இனி பேஸ்புக்கிலும் இணைத்துக் கொள்ளலாம்

2


வாட்ஸ்ஆப்பில் வைக்கும் ஸ்டேட்டஸ் ஸ்டோரிகளை இனி பேஸ்புக்கிலும் இணைத்து கொண்டு நம் நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.


வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை இனி பேஸ்புக் நண்பர்களுக்கும் ஷேர் செய்யும் புதியவசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பீட்டா பதிப்பில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் தற்போது அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த புதிய அம்சம் ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு வழங்கப்படுகிறது. நாளடைவில் இந்த அம்சம் அனைவரும் பயன்படுத்தும் விதமாக கொண்டுவரப்படும் என வாட்ஸ்ஆப்பின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பேஸ்புக் ஸ்டோரியில் வைத்துக் கொள்ள “Share to Facebook Story” எனும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் டேப் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்தவசதி முழுமையாக பாதுகாக்கப்பட்டதாகவும், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களை பேஸ்புக் ஸ்டோரியுடன் ஷேர் செய்வதால் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் விவரங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளாது என வாட்ஸ்ஆப் அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.


வாட்ஸ்ஆப் ஆண்டிராய்டு 2.19.258 மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்ஆப் பதிவு 2.19.92 பதிப்புகளில் புதிய வசதியுடன் வழங்கப்படுகிறது.
#Whatsapp #Status #FacebookStory #In4Net