ஸ்பேம் குறுஞ்செய்திகளுக்காக வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்யும் புதிய வசதி

Get real time updates directly on you device, subscribe now.

வாட்ஸ்ஆப் செயலி வழியாக நாள்தோறும் பில்லியன் கணக்கான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் , ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவை பரிமாறப்படுகின்றன. இவற்றில் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஸ்பாம் குறுஞ்செய்திகளும் அடங்கும்.

இதனைத் தவிர்ப்பதற்கு புதிய Report வசதி வாட்ஸ்ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் ஊடாக குறித்த ஸ்பாம் குறுஞ்செய்தி மற்றும் அந்த செய்தியை பரிமாற்றம் செய்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் Report செய்ய முடியும்.

எனினும் குறித்த செய்தி ஸ்பாம் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே அது தொடர்பில் வாட்ஸ்ஆப் நடவடிக்கை எடுக்கும். இந்தப் புதிய வசதியானது 2.20.206.3 வாட்ஸ்ஆப் பதிப்பில் கிடைக்கப் பெறுகின்றது.

ஆண்டிராயிட் பயனர்கள் இந்தப் பதிப்பினை தற்போது பெற்றுக் கொள்ள முடிவதுடன், iOS பயனர்கள் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய பதிப்பினை பெற்றுக் கொள்ள முடிகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader