IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

என்னது, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்ஆப் நீக்கப்பட்டுவிட்டதா..?

0 62

வாட்ஸ்ஆப் செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. இத்தகவலை கண்டு பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்ஆப் இருக்கிறதா அல்லது நீக்கப்பட்டுவிட்டதா என்ற சந்தேகமும் பயனாளர்களிடம் எழுந்துள்ளது.

செல்போன் உலகின் அபார வளர்ச்சியில் ஒன்று மொபைல் செயலிகள். உலகில் வாழும் பல கோடி மக்களை இணைக்கும் சாதனமாக மொபைல் செயலிகள் உருவெடுத்துள்ளது. பலகோடி பயனாளர்களை கொண்ட வாட்ஸ்ஆப் செயலி பேஸ்புக் நிறுவனத்திற்கும் சொந்தமானது. வாட்ஸ்ஆப் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மாயமாகியுள்ளதாக சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த பயனாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

ஆரம்பம் முதல் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் எதுவும் வரவில்லை என்றும், புதிதாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர் கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று பார்த்தால் வாட்ஸ்ஆப் என்ற செயலி அதில் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

முதலில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்திவிட்டு ஏதோ ஒரு காரணத்தினால் அந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்திருந்தால் மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் “previously installed app” என்ற பகுதியிலிருந்து download செய்துகொள்லாம் என்று ஒரு தகவல் வந்துள்ளது.

ஆனால் வாட்ஸ்ஆப்பை முற்றிலுமாக ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கவுமில்லை, பேக் லிஸ்டில் சேர்க்கவுமில்லை என்ற தகவல் பேஸ்புக் நிறுவனத்தினால் வெளியாகியுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் வாட்ஸ்ஆப் மீது தீடீரென எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பது பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Google #PlayStore #Whatsapp #In4Net