IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிப்ரவரி1 முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது

93

Get real time updates directly on you device, subscribe now.

 

2020-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸ் அப் செயலி தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு பிப்ரவர் 1-ம் தேதியில் இருந்து பழைய மாடல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், மற்றும் ஐபோன்கள், விண்டோஸ் மொபைல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது.

மேலும் அதன்படி, ஆண்ட்ராய்ட் 2.3.7 ஆகிய வெர்சன்களில் வாட்ஸ் அப் இயக்காது. ஐபோன்களில் ஐஓஸ் 8 பிரிவிலும் வாட்ஸ் அப் செயலி இயங்காது. இந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் புதிய வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்க முடியாது, ஏற்கெனவே இருக்கும் வாட்ஸ் அப் கணக்குகளையும் அப்டேட் செய்யவும் முடியாது.

Related Posts
1 of 6

விண்டோஸ் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தங்களுடைய சாட் தகவல்கள் அனைத்தையும், எக்ஸ்போர்ட் ஆப்ஷன் மூலம் சேமித்துக் கொள்வது நல்லது. ஜியோ போன், ஜியோ போன்2 ஆகியவற்றில் செயல்படும் கேஏஐஎஸ் 2.5.1 ஆகிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் வாட்ஸ் அப் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆண்ட்ராய்ட் 4.0.3, அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும், ஐபோன் ஐஓஸ்9 அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும் வாட்ஸ் அப் தன்னுடைய மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும். ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2 ஆகியவற்றில் இயங்கும் கேஏஐஓஎஸ் 2.5.1 அதற்கு மேம்பட்ட வெர்ஷன்களில் வாட்ஸ் அப் இயங்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 

#WhatsApp #not #work #specific #Android #smartphones February1

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More