வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாகும் புத்தம் புதிய வசதி! பயனர்கள் கொண்டாட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

வாட்ஸ்ஆப்பில் சில தினங்களுக்கு முன் தானாக அழியக்கூடிய குறுஞ்செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய வசதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயனர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதன்படி Mute Video எனும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ்ஆப்பின் ஊடாக வீடியோ ஒன்றினை பரிமாறும் முன்னர் அதனை Mute செய்து அனுப்ப முடியும்.

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி 2.20.207.2 எனும் பீட்டா பதிப்பில் இந்த வசதி உள்ளடக்கப்படும் என தெரிகின்றது. இந்த வசதியை எடுத்துக்காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பயனர்கள் வீடியோ ஒன்றினை ட்ரிம் செய்ய முடிவதுடன், எழுத்துக்கள், ஈமோஜிக்கள் போன்வற்றினை சேர்த்துக் கொள்ளவும் முடியும். அதேநேரம் பின்னணி ஒலியை இல்லாது செய்யவும் முடியும். இவ்வாறு பின்னணி ஒலியை இல்லாது செய்யும் வசதியே Mute Video ஆகும்.

இதேவேளை குறித்த வசதியானது முதலில் ஆண்டிராயிட் சாதனங்களுக்கான வாட்ஸ்ஆப் அப்ளிக்கேஷனிலேயே அறிமுகம் செய்யப்படும் எனவும் அதன் பின்னரே iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More