வாட்ஸ்ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா முழுவதிலுமாக வாட்ஸ்ஆப் மூலமே மக்கள் பணம் செலுத்த முடியும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்தப் பாதுகாப்பான பணம் செலுத்தும் அனுபவம், 2 கோடி இந்தியர்களுக்கு, எப்படி ஒரு தகவலை எளிதில் பரிமாற முடியுமோ அதேபோல் பணத்தையும் பரிமாறுவதற்கு உதவும். இதன்மூலம், மக்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தார் அல்லது தெரிந்த நபர்களுக்கு நேரடியாகச் செல்லாமலோ அல்லது உள்ளூர் வங்கிக்குப் போகாமலோ பாதுகாப்பாகப் பணத்தை அனுப்ப முடியும்.


வாட்ஸ்ஆப் அதனுடைய பணம் செலுத்துதல் வசதியை, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) அமைப்பின் கூட்டுடன், இந்திய முன்னுரிமை, நிகழ் நேர பணம் செலுத்துதல் வழிமுறையான யூனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யூபிஐ) வழிமுறையைப் பயன்படுத்தி வடிவமைத்திருப்பது, 160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகள் மூலம் எளிதில் பணப் பரிமாற்றம் நடைபெற வழிவகுக்கிறது.

(function($){ function bsaProResize() { var sid = "143"; var object = $(".bsaProContainer-" + sid + " .bsaProItemInner__img"); var animateThumb = $(".bsaProContainer-" + sid + " .bsaProAnimateThumb"); var innerThumb = $(".bsaProContainer-" + sid + " .bsaProItemInner__thumb"); var parentWidth = "728"; var parentHeight = "90"; var objectWidth = object.parent().outerWidth(); // var objectWidth = object.width(); if ( objectWidth <= parentWidth ) { var scale = objectWidth / parentWidth; if ( objectWidth > 0 && objectWidth !== 100 && scale > 0 ) { animateThumb.height(parentHeight * scale); innerThumb.height(parentHeight * scale); object.height(parentHeight * scale); } else { animateThumb.height(parentHeight); innerThumb.height(parentHeight); object.height(parentHeight); } } else { animateThumb.height(parentHeight); innerThumb.height(parentHeight); object.height(parentHeight); } } $(document).ready(function(){ bsaProResize(); $(window).resize(function(){ bsaProResize(); }); }); })(jQuery);

 

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு வகை மொபைல்களிலும், வாட்ஸ்ஆப் புத்தம்புது பதிப்புருவில் (லேட்டஸ்ட் வெர்ஷன்) பணம் செலுத்துதல் வசதியானது, இதன் செயல்தளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இதர வசதிகள் எவ்வாறு தானாகவே இடம்பெறுகின்றவோ அதேபோல், தானாகவே இடம்பெறுகிறது.செயல்பாட்டைத் தொடங்குவதற்கு, நீங்கள் யாருக்குப் பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த நபருடனான உரையாடலை (சாட்) திறந்து, வழக்கமாக உருவம் (இமேஜ்), ஆவணம் (டாக்குமென்ட்) மற்றும் தொடர்பை (கான்டாக்ட்) அனுப்புவதற்காக எப்படி ‘இணைப்பு’ (அட்டாச்) என்பதைத் தட்டுவீர்களோ அவ்விதம் தொடுங்கள்.

 

அடுத்ததாக, ‘செலுத்துகை’ (பேமென்ட்) என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்களது பற்று அட்டை (டெபிட் கார்டு) விவரங்களை நிரப்பி உங்களது பற்று அட்டையை உறுதி செய்வதற்காக, அத்துடன் உங்களது தனிப்பட்ட யூபிஐ பின் (UPI PIN) எண்ணைக் கட்டமையுங்கள். ‘ஓகே’ என்பதைத் தொடுங்கள், இப்போது நீங்கள் முறைப்படி நிறுவிவிட்டீர்கள். பின்பு தொகையைப் பதிவிட்டு உங்களது தனிப்பட்ட யூபிஐ பின் மூலம் பரிமாற்றத்தை உறுதி செய்யுங்கள்.

இந்தியாவில் வாட்ஸ்ஆப் மூலம் பணம் செலுத்துவதற்கு, இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்கும் அதற்கான பற்று அட்டையும் அவசியம். பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் என்றும் அழைக்கப்படுகின்ற வங்கிகளுக்கு வாட்ஸ்ஆப் உத்தரவுகளை அனுப்பும், அதன்மூலம் யூபிஐ வழியாக, அனுப்புநர் மற்றும் பெறுநரின் வங்கிக் கணக்குகள் இடையே பணப் பரிமாற்றம் நடத்தப்படும். வாட்ஸ்ஆப்பில் உள்ள இதர அம்சங்களைப் போலத்தான் இதுவும்.

ஒவ்வொரு முறை பணம் செலுத்துவதற்கும் தனிப்பட்ட யூபிஐ பின் எண்ணைப் பதிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட வலுவான பாதுகாப்பு மற்றும் தனிமறைவுக் கொள்கைகளால் பணம் செலுத்தும் வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப்பின் பணம் செலுத்தும் வசதிகள் தற்போது இந்தியாவின் 10 பிராந்திய மொழிகளில் கிடைக்கின்றன. உங்களுக்குத் தேவைப்படுவது யூபிஐ வசதியுள்ள ஒரு வங்கியின் பற்று அட்டை மட்டுமே, இதன் மூலம் நீங்கள் உடனடியாக இதனைச் செயல்படுத்திவிட முடியும். வாட்ஸ்ஆப்பின் புத்தம்புது பதிப்புருவில் நீங்கள் இதனைக் கண்டறியலாம்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader