IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரனோவை விரட்ட உலக சுகாதார அமைப்புடன் கைகோர்க்கும் வாட்ஸ்ஆப்

99

உலகளவில் வாட்ஸ் ஆப் செயலியினை ஏறத்தாழ 2 பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு வாட்ஸ்ஆப் தயாராகவுள்ளது.

இதற்காக உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றவுள்ளது. ஏற்கனவே பேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் வாட்ஸ் ஆப் செயலியும் இணைந்துள்ளது.

Related Posts
1 of 7

இதன்படி கொரோனா தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்த தொடர்பில் கண்காணித்து அவற்றினை நீக்குவதுடன், மக்களுக்கு சரியான ஆறுதல் அளிக்கக்கூடிய வகையிலான உண்மைத் தகவல்களை கொண்டு சென்று சேர்க்கவுள்ளது.

இந்த வசதியினைப் பெறுவதற்கு மொபைலில் வாட்ஸ் ஆப்பினை திறந்து https://api.whatsapp.com/send?phone=41225017596&text=hi&source=&data= எனும் இணைப்பில் சென்று இணைய வேண்டும்.

அல்லது +41794752209 எனும் தொலைபேசி இலக்கத்தினை மொபைல் சாதனத்தில் சேமித்து அதனுடன் சாட் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.