IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்! வாட்ஸ்ஆப் அதிரடி

Get real time updates directly on you device, subscribe now.

சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து பலரும் பல்வேறு விதமான வதந்திகளை பரப்பி விடுகின்றன. இதனால் வீடுகளில் இருக்கும் மக்கள் வைரஸ் குறித்து மேலும் அச்சம் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. இதனை தடுக்க வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு அதிரடியான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி அதிகமுறை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என அந்த நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்களை ஒரே சமயத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். இனி ஒரே நேரத்தில் அதனை ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More