IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டிரேட் மார்க் என்றால் என்ன? நாம் செய்யும் தொழிலுக்கு அதனால் என்ன நன்மை ?

Get real time updates directly on you device, subscribe now.

பிராண்ட் நேம் பதிவு செய்தல் என்பது ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருளுக்கோ அல்லது அந்நிறுவனத்தின் சேவைக்கோ டிரேட் மார்க் பெறுதல், சுருக்கமாக (TM) என்பர். இதற்கான சான்றிதழை டிரேட் மார்க் சான்றிதழ் என்பர். இத்தைகய டிரேட் மார்க்கை தான் பிராண்ட் நேம் என்கிறோம்.

டிரேட் மார்க் பெறுவதால் ஒரு நிறுவனத்துக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். டிரேட் மார்க் பெற்றவரின் பெயரில் வேறு யாராவது தொழில் தொடங்கினாலோ அல்லது போலியாக பொருளை தயாரித்தாலோ உரிமைமீறல் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெற முடியும். மேலும் அந்த நிறுவனத்தின் மீது தடை உத்தரவும் வாங்கலாம்.

இந்த டிரேட் மார்க் சான்றிதழைப் பெறுவதற்கான அலுவலகம் சென்னை, கிண்டியில்தான் உள்ளது. டிரேட் மார்க்கை செய்ய 3500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு செய்த பிறகு அந்த டிரேட் மார்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். நாம் வைக்க விரும்பும் டிரேட் மார்க்கை இதற்கு முன்பு யாரும் பயன்படுத்தாமல் இருப்பது, டிரேட் மார்க் பதிவு செய்வதற்கான முக்கிய நிபந்தனையாகும்.

www.ipindiaonline.gov.in என்ற வெப்சைட்டில் ஏற்கனவே பதிவு பெற்ற டிரேட் மார்க்குகளை பட்டியலைக் காணலாம். டிரேட் மார்க் சான்றிதழுக்காக கொடுக்கப்படும் விண்ணப்பம் மூன்று வகைகளில் பரீசீலிக்கப்படும்.

நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் அல்லது உங்களது நிறுவனத்தின் சர்வீஸ்,
1) டிரேட் மார்க் வாங்கும் அளவுக்கு தனித்துவம் பெற்றிருக்க வேண்டும்.
2) கேட்கப்படும் டிரேட் மார்க் வேறு நிறுவனங்கள் வைத்திருக்கக்கூடாது.
3) கேட்கப்படும் டிரேட் மார்க்கானது உற்பத்தி பொருளின் தரத்தையோ அல்லது அதன் பெயரையோ குறிக்கும் படி அமைய வேண்டும்.

இம்மூன்றும் சரிவர அமைந்தால் ஒரு வருடத்திற்குள் டிரேட் மார்க் சான்றிதழ் (TM Certificate) உங்கள் கைக்கு கிட்டும்.

போட்டிமயமான தொழில் துறையில் நாம் உற்பத்தி செய்யும் பொருள் அல்லது சேவையின் தரத்தை நிலை நாட்ட டிரேட் மார்க் அவசியமாகிறது. அதேபோல பொருளின் உரிமையை ஒருவர் தன்வசமே வைத்துக்கொள்வதற்கும் இந்த டிரேட் மார்க் அவசியமாகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader