IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லாக் டவுனில் கணவன்-மனைவிக்குள் அதிகம் சண்டை வரக் காரணம் என்ன?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா லாக்டவுனில் சிலருக்கு கணவன் மனைவி உறவை பலப்படுத்தியிருக்கிறது எனில் சிலருக்கு அதை வெறுக்க வைத்துள்ளது. அதற்குக் காரணமாக சில பிரச்னைகளாக முன்வைக்கப்படுபவை என்னென்ன பார்க்கலாம்.

தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுதல் : என்னதான் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் அவர்களுக்கென தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். இந்த லாக்டவுனில் ஒரே வீட்டில் நாள் முழுக்க இருப்பதால் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட விஷயங்களுக்கு இடமில்லாமல் போகிறது. இதனால் அவர்களின் தலையிடலும் சில சமயங்களில் இருக்கலாம். இதைக் கேட்க இருவருக்குள்ளும் வாக்கு வாதம் நிகழ்ந்து சண்டை உருவாகிறது.

பொருளாதாரப் பிரச்சனை : இந்த பொருளாதாரப் பிரச்சனை என்பது குடும்பங்களில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே உள்ள பிரச்சனை. பொருளாதார நெருக்கடி , எதிர்கால பயம், கடன் என பலப் பிரச்சனைகள் பொருளாதார பயத்தை உண்டாக்குகிறது. இது ஒருவித இயலாமையால் வரும் பயம். அதை எங்கு காட்டுவது என தெரியாமல் இருவருக்குள்ளேயே மாறி மாறி காட்டிக் கொள்வதால் சண்டை உண்டாகிறது.

கூடி இருப்பதால் வெறுப்பு : தினமும் ஒரே முகம். பேசி தீர்த்தாகிவிட்டது. உறவுகளுக்குள் இருக்கும் சர்ப்பிரைஸ், எதிர்பார்ப்பு இப்படி எதுவுமே இல்லாமல் இருக்கும் நிலை சிலசமயம் வாழ்கையே போர் அடித்ததாக சிந்தனையைக் கொடுக்கும். அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷங்கள் இருக்காது. வெளியே எங்கும் செல்ல முடியாது. இதனால் கூட சண்டைகள் வரலாம்.

பகிர்ந்துகொள்ளாமை : வீட்டில் ஒருவர் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்க ஒருவர் வேடிக்கை பார்த்தால் கணவன் மனைவிக்குள் நிச்சயம் சண்டை வரும். வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் ஈடாக இருக்கும்போது வேலையிலும் சம உரிமை எடுத்துக் கொள்வதே நாகரீகம். இதை சரியாகக் கடைபிடிக்கவில்லை எனில் அதற்காகவே தினம் தினம் சண்டை வரும்.

பேச்சுவார்த்தை இல்லை : சிலர் அருகில் பேச ஆள் இருந்தாலும் செல்ஃபோன், லாப்டாப் , வீடியோ கேம்ஸ் என இருப்பார்கள். இதனால் எப்போதும் உடன் இருக்கும் துணையிடம் பேசாமல் அதில் நேரத்தைக் கழிப்பது கோபத்தை உண்டாக்கும். இதனால் சண்டை நிச்சயம் வரும்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader