IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சித்தா, ஆயுர்வேதம் உட்பட மருத்துவ துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?

Get real time updates directly on you device, subscribe now.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவத் துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் தனித்தனியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற விபரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய மருத்துவ துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளிப்பதில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசின் ஆயுஷ் துறை சார்பில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் கனகவள்ளி தாக்கல் செய்த மனுவில் சித்த மருத்துவத்துக்கு, ஆயுஷ் அமைச்சகம் உரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கொரோனா தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த, ஆயுஷ் நடவடிக்கை எடுத்து வருகிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு, 10 ஆண்டுகளில் 237 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு நேற்று (ஆக.,13) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், அறிக்கை தாக்கல் செய்தார்.

சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை ஒவ்வொன்றுக்கும், 10 ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள விபரங்களை, மத்திய அரசு தாக்கல் செய்ய, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டது. விசாரணையை வருகின்ற 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader