IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. ? சீறினார் எடப்பாடியார்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக நிலைமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோகமாக உள்ளது என்றார். அதிமுகவின் வெற்றி பாதை பிரகாசமாக உள்ளது.

இடைத் தேர்தலின் வெற்றியைப் பார்க்கும் போதே தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என்று நன்றாக தெரிகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டணியைத் தான் வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்று யார் சொன்னது ? தமிழக அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் சொல்ல அவர் என்ன அரசியல் கட்சி தலைவரா? அவர் வெறும் சினிமா நடிகர்தான். ஒரு நடிகருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். நடிகரின் பேச்சுகளை மீடியாக்காரர்கள் தான் பெரிது படுத்துகிறார்கள் என்றும் பேசினார்.

மேலும் அதிமுகவில் இணைய புகழேந்தி கடிதம் கொடுத்தால் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் பேட்டியில் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader